கிருமிகளை பெருக்கும் துவாய்


Towelமனித உயிரை காவுகொள்வதில் கண்ணுக்கு புலப்படாத கிருமிகள் பாரிய பங்காற்றுகின்றன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. பாம்பு, கரடி, புலி, சிங்கத்தை கண்டு பயந்த நாம் தற்போது கிருமிகளை கண்டும் அஞ்ச வேண்டியுள்ளது.நாம் உண்ணும் உணவு முதல் அனைத்து விடயங்களிலும் இவை செல்வாக்கு செலுத்தி வருகின்றன. 

இந்நிலையில் வீடுகளில் கிருமிகளை பரப்புவதில் தூவாய்கள் மிக மோசமான குற்றவாளியாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமலறை துவாய்கள் மட்டுமன்றி குளியலறை துவாய்களும் நோய்களை மிக வேகமாக பரப்புவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தள்ளனர்.

துவாய்கள் அதிக நேரம் ஈரத்தன்மையுடன் காணப்படுவதனாலும் வீட்டில் கிருமிகள் அதிகம் காணப்படும் இடங்களில் பயன்படுத்துவதாலும் வீடுகளில் கிருமிகள் பெருகவும் பரவவும் இவை காரணமாகின்றன.

வயிற்றோற்றத்துக்கும் உணவு நஞ்சாதலுக்கும் காரணமாககூடிய கொலிபோப் கிருமி (இது மலத்தில் காணப்படுவது) 89 சதவீதமாக சமயலறை துவாய்களிலும் ஈகொலி (இதுவும் மலத்தில் காணப்படும்) 25.6 சதவீதமாக  துவாய்களில் காணப்பட்டதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

‘சமைக்கப்படாத இறைச்சியை தொட்டுவிட்டு  துவாயில் கைகளை துடைப்பதால் துவாய்களில் அதிகமாக கிருமிகள்; தொற்றிக்கொள்கின்றன. அதேபோன்று, துவாயில் கையை துடைத்துவிட்டு சமைக்கும்போதும் சாப்பிடும்போதும் உணவில் கிருமிகள் தொற்றிகொள்கின்றன. ஒரே துவாயை குடும்பத்தவர்கள் பகிரும்போது கிருமிகளும்; வைரஸ்களும் பரவுகின்றன’ என ஆய்வாளர் சாள்ஸ் கேபா கூறியுள்ளார்.

துவாய்களை உலர செய்வதால் மலக்கிருமி தொற்று அற்றுப் போகாது. துவாய் மீண்டும் ஈரமாகும்போது அவை பெருகுகின்றன.  வெளிற்றும் இராசாயனங்களில் துணிகளை ஊறப்போடுவது கூடுதல் பலனளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

குளியலறையில் பயன்படுத்தப்படும் துவாய்களை மிக கவனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
துவாய்களில் முகத்தை அல்லது உடலை துடைக்கும்போது நுண்ணுயிர்களுககு இடம்கொடுக்கப்படுகின்றது. மீண்டும் அதே துவாயை நன்கு

உலர்த்தாமல் பயன்படுத்தும்போது எமது உடலிலிருந்து வெளியேறிய நுண்ணங்கிகள் பல்கிபெருக வாயப்பளிக்கப்படுகின்றது.
அதிகளவான பக்டீரியாக்கள் நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்த கூடியவை அல்ல. ஆனால், பிருட்டம் பகுதிகளை துடைக்கும்போது தொற்றிகொள்ளும் கிருமிகள் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தகூடியவை. இக் கிருமிகள் காணப்படும் துவாயை குழந்தைகள் அல்லது வேறு யாரேனும் பயன்படுத்தினால் வாந்தி, வயிற்றோற்றம் இவர்களுக்கு ஏற்படுகின்றது.

இத்தகைய துவாயை முகம் துடைக்க பயன்படுத்தும்போது மேற்படி கிருமிகள்; வாய் வழியாக வயிற்றுக்குள் செல்கின்றன. இதன்போது அவை வாந்தி, வயிற்றோற்த்தை தோற்றவிக்கின்றன’ என மேற்படி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கால் பாதங்களிலிருந்து பரவும் கிருமிகள்; மிக மோசமான நிலையை தோற்றுவிக்கின்றன. துவாயில் கால் பாதங்களை துடைக்கும் பழக்கம் எம்மில் அநேகமானவருக்கு உண்டு. கால்பாதங்களில் தொற்றியிருக்கும் கிருமிகள் இலகுவாக துவாய்களுக்குள் புகுந்துவிடுகின்றன.

துவாய்கள் நன்கு உலராமல் இருக்கும்போது அவை வாயினுள் சென்று விடுகின்றன. இவை பின்னர் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
துவாய், சவர்க்காரம் என்பன மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்தக்கூடிய விடயங்களை என்பதை எம்மில் அநேகமானோர் மறந்தவிடுகின்றனர். குறிப்பிட்ட நேரத்துக்கு பயன்படுத்திவிட்டு அதனை உலரவைக்கமால் ஆங்காங்கே போட்டு விட்டுச் செல்வதால் கிருமிகள் மிக இலகுவாக துவாய்களில் தொற்றி விடுகின்றன.  இவை பின்னர் பாரதூரமான நோய்களை தோற்றுவித்த மரணப் படுக்கையில் எம்மை கிடத்தி விடுகின்றது என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

ஒருவர் குறைந்தது மூன்று துவாய்களையேனும் மாறிமாறி பயன்படுத்தினால் இவ்வாறான கிருமி தொற்றுக்களிலிருந்து ஓரளவேனும் தப்பிக்கலாமென்பது ஒரு கருத்தாக உள்ளது.

இத்துவாய்களை, வெளுக்கும் பவுடர்களால் நன்கு கழுவி பின்னர் அதனை வெயில் கூடிய இடத்தில் உலர வைத்து மாறிமாறி பயன்படுத்தலாம். ஆனாலும் முற்றிலும் கிருமி தொற்றுக்களிலிருந்து தப்பிப்பது ஒவ்வொருவரதும் முறையான பழக்கவழகங்களிலே உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisements