முஸ்லீம் மனிதர் இன்னொரு முஸ்லீமுக்கு குழி தோண்டுகின்றார் – ஜனாதிபதி


mahinda rajapaksha– அஸ்ரப் ஏ சமத் –

  இன்று பி.பகல் 3 மணிக்கு இரத்தினபுரியில் ஜனாதிபதி மஹிந்தவின்   ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார உரையின்போது அமைச்சர் றிசாத் பதியுத்தீன் எதிர்தரப்புக்கு போனதை பற்றியும் அவர் அங்கு  உரையாற்றினார்.  அவரதுரையில் “முஸ்லீம் மினியாவ ரவட்டல தவ முஸ்லீம்மினியா மந்திரிக்கமக் அரக்கன ஏ பத்த அத கீலாத்தியன்னவா ஏயா கொந்த மாகாத்தியானன் ஏ மந்திரிகம தீலா யண்ட ஓனே “

வெட்கமில்லையா அப்பாவி முஸ்லீம் மனிதரின் பதவியை எடுத்துக்கொண்டு ஒரு முஸ்லீம் தலைவர் அவரையும் அழைத்துக் கொண்டு அந்தப் பக்கம் சென்றுள்ளார். நல்ல கௌரவ தலைவராக “மாத்துருவாக” அவர் இருந்திருந்தால் அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுவிட்டுச் சென்றிருக்க வேண்டும். நான் என்ன செய்யலாம் எல்லாரையும் நம்பி அவர்களது விசுவாசத்தின் அடிப்படையில்தான் இதனைச் செய்தது. முஸ்லீம் மனிதர் இன்னொரு முஸ்லீமுக்கு குழி தோண்டுகின்றார்.

இந்த முஸ்லீம் தலைவர் போவார் என்று எனக்குத் எப்பவோ தெரியும். இந்தத் தலைவர்கள் எல்லாம் இந்த நாட்டில் உள்ள அப்பாவி முஸ்லீம்களெல்லாம் அவர்களிடம் உள்ளனர் என்று என்னுடன் கணக்கும் வழக்குப் பேசுகின்றனர். பல சலுகைகளையும் கேட்கின்றனர். அதற்காக நான் அப்பாவி முஸ்லீம்களை இவர்களுக்கு விற்பதற்கு ஒருபோதும் துணைபோக மாட்டேன் என ஜனாதிபதி அங்கு பேசினார்.