உளநோய் நீங்கி உள்ளங்கள் அமைதி பெற ஆன்மீகம் தேவை – உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா


உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பல ஆயிரம் பிரச்சினைகளுடன் பிறக்கின்றான்  அதே நேரம் பல் வேறு வகைப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றான். இதில் பிரச்சினைகளை இருவகையாக வகைப்படுத்த முடியும். ஒன்று எம்மை நோக்கி வருகின்ற பிரச்சினைகள்.

இரண்டாவது வகை நாம் பிரச்சினைகளை எம் கரங்களாளேயே உருவாக்கிக் கொள்வது. முதலாவது வகைப்பிரச்சினை ஒரு சோதனையாக அல்லது பிரச்சினையில் இருந்து விடுபடவதற்கான அனுபவத்தை வாழ்க்கை எமக்குக் கற்றுத் தரும். காலப்போக்கில் அப்பிரச்சினைகள் தீர்ந்து விடலாம். உதாரணமாக தொழில் இல்லாப் பிரச்சினை, பொருளாதாரப்பிரச்சினை, குடும்ப ரீதியான பிரச்சினைகளை குறிப்பிடலாம்.

இரண்டாம் வகைப்பிரச்சினை முற்றிலும் வேறுபட்டது அதாவது மற்றவரின் முன்னேற்றம் கண்டு தன்னை வருத்திக்கொள்வது இதனால் நாமே எம்மை வீனாக உடல் உள ரீதியாக அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றோம் உதாரணமாக பொறாமை, வஞ்சகம் போன்றவைகளால் எழும் பிரச்சினை இவ்வகையான பிரச்சினைகளை இஸ்லாமும் வரவேற்கவில்லை கடுமையாக எதிர்க்கின்றது இப்பிரச்சினைகளை தன் தலையில் போடுகின்றவர்கள் மேலதிகமாக தேவையற்ற உள பாதிப்புக்குள்ளாகின்றார்கள் இப்பிரச்சினைகள் காலப்போக்கில் தீர்வு காணமுடியாது தன்னைத்தான் உணர்ந்து திருந்தும் வரை தீர்வு இல்லை.

இவ்வகையான உள நோய்க்குள்ளாகின்றவர்களினால் ஆக்கவூர்வமான எச்செயலிலும் ஈடுபட முடியாது. மற்றவரைப்பற்றியே கவலை கொண்டிருப்பார் தன் ஆளுமை விருத்தி அறிவு விருத்தி தொடர்பாக இவரால் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது. இவ்வகையான உள நோய்க்குள்ளாகின்றவர்கள் தன் மனோநிலையை ஆற்றுப்படுத்திக் கொள்ள சந்துகள் பொந்துகளில் மற்றவரைப்பற்றி பேசுவது, முகப்புத்தகங்களில் மற்றவரைப்பற்றி இழிவுபடுத்துவது, மற்றவரை மட்டம் தட்ட எவ்வகையான அநாகரீகமற்ற செயலில் ஈடுபடலாம் என்று சிந்திப்பது செயல்படுவது ஒரு உளநோய் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வகையான பிரச்சினைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கும் ஆன்மீகத்திற்கும் நீண்ட இடைவெளி காணப்படுகின்றது. எனவே இவ்வாறான உள நோய்க்குள்ளாகின்றவர்கள் தனது நோயைப் போக்க ஆன்மீகம் தொடர்பான செல்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் இல்லாவிடின் நிரந்தர உளநோய்குள்ளாகிவிடுவோம்.

Advertisements