மத்தள விமான நிலையம் செயலற்றுப் போகும் நிலை உருவாகிறது


மஹிந்த ராஜபக்சவினால் பெரும் ஆர்ப்பாட்டத்தோடு உருவாக்கப்பட்ட மத்தள ராஜபக்ச விமான நிலையம் ஏறத்தாழ செயலற்றுப் போகும் நிலையை நெருங்கியுள்ளதாக அறியமுடிகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையும் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மத்திய கிழக்கின் இரு விமான சேவை நிறுவனங்களைத் தவிர வேறு எந்த வெளிநாட்டு நிறுவனங்களும் குறித்த விமானநிலையத்தை உபயோகிப்பதில்லை எனும் நிலையில் விரைவில் டுபாயின் இரு குறைந்த விலை விமான சேவை நிறுவனங்களான மற்றும் சேவையும் மத்தள விமான நிலையத்தைக் கைவிடும் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான விமான சேவையை இயக்குவதாயின் மத்தள விமான நிலையத்தை மாத்திரமே உபயோகிக்க முடியும் எனும் நிபந்தனையிலேயே குறித்த விமான சேவைகளும் மத்தள விமான நிலையத்தை உபயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

– SNKR

Advertisements