புதிய கிழக்கு மாகாண அமைச்சர்கள் நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இலங்கை வந்ததும் – முதலமைச்சர் நசீர்


– அஸ்ரப் .ஏ.சமத் – 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இலங்கை வந்ததும் புதிய கிழக்கு மாகாண அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்தை முன் எடுத்துச் செல்லப்படும் என புதிய கிழக்கு மாகாண அமைச்சர்
நசீர் அஹமட் தெரிவித்தார்.

இன்று தாருஸ்ஸலாமில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழ் பத்திரிகைகளின் ஊடகவியலாளார்களை சந்தித்தார். அச் சந்திப்பின் போதே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார். முன்னைய அரசின் நிர்வாகத்தில் கிழக்கில் பல்வேறு காணிகளை முதலீட்டு சபை ஊடாக தனியார் அரசியல்வாதிகள் முதலீட்டுக் கம்பனிகளுக்கு எடுத்து அக்காணிகளை எவ்வித அபிவிருத்திகளோ முதலீடுகளோ அற்ற முறையில் வைத்துள்ளனர். அவைகள் அனைத்தும் கிழக்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுத்து அவைகள் தடுத்து நிறுத்தப்படும்.

நான் முதலமைச்சராக பாரமெடுத்த அடுத்தகணமே ஒவ்வொரு மாகாணசபை உறுப்பினருக்கும் பண்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதியாக வருடாந்தம் 40 இலட்சம் ரூபா அதிகரித்துள்ளேன். கடந்தவருடம் 30 இலட்சம் ரூபாவே ஒதுக்கப்பட்டு இருந்தது. கிழக்கு மாகாண சபை ஆட்சியில் 37 மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 4 அரசியல் கட்சிகளின் இருந்தும் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அவற்றில் 7 உயர் பதவிகள் மிகுதியாக உள்ளன. இதனை ரீ.என்.ஏ,  யு.என்.பி, ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு இந்த பதவிகள் பகிர்ந்தளிக்கப்படும்.

அம்பாறை மாவட்டத்திற்கும் ஒர் அமைச்சர் பதவி கொடுக்கப்படல் வேண்டும். எனது முதலமைச்சர் பதவிக்கு மாகண சபை உறுப்பினர் சிப்லி பாருக் அலிசாஹிர் மௌலானா சம்பூரண விருப்பத்துடன் கைச்சாத்திட்டார்கள். முன்னைய அரசின் ஒப்பந்தத்தின் படியே கிழக்கு மாகாண சபை இரண்டரை வருடத்திற்கு முஸ்லீம் காங்கிரசுக்கு வழங்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மற்றும் ஜனாதிபதியின் அனுமதியும்பெறப்பட்டது.

முன்னைய கிழக்கு ஆளுனர் ஒர் இரானுவ ஆட்சியாளராகவே இருந்துவந்தார். அதனால் சிறுவிடயத்தைக் கூட அனுமதிக்கு அனுப்பினால் அது ஆளுனரிடம் தேங்கிக் கிடந்தது. தற்பொழுது இலங்கை நிருவாக சேவையில் ஓய்வு பெற்ற ஒருவரே ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் எமது சகல மாகாண நிருவாகமும் இலகுவாக நடைபெறலாம் என நம்புகின்றேன் .

கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான முஸ்லீம் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் தேடிச் செல்கின்றனர். அதனை நிறுத்தி அவர்கள் தமது வீட்டிலேயே அல்லது ஊரிலேயே இருந்து தொழில் செய்யக்கூடியதொருவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக தொழில் பேட்டைகளை அமைக்க வேண்டும். அதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து முதலிட முன்வருமாறும்,  அவர்களுக்குரிய அரச வசதிகளையும் நாம் செய்து கொடுக்க வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு அரச தனியார் காணிகளை பாதுகாப்புப் படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுள்ளனர்.

மாகாண சபையின் அதிகாரத்தில் 13வது அரசியல் அதிகாரம் மாகாணசபைக்கு வழங்கப்படல் வேண்டும். அதில் மாகாணசபைக்கு காணி அதிகாரமும், பொலிஸ் என்பது ஒரு சிவில் சேவை, அந்த அதிகாரமும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படல் வேண்டும்.

கேள்வி – முன்னைய முதலமைச்சர்கள் அடிக்கடி சொல்வது கிழக்கு முதலமைச்சர்களுக்கு ஒரு பீயோனைக் கூட நியமிக்க அதிகாரம் இல்லை என்று சொல்லியிருக்கின்றார்கள்.

முதலமைச்சர் – இல்லை. முந்திய ஆட்சியில் ; இன ரீதியாக இவ்வாறு ஆட்சியினை சீராக செயல்படுத்த முடியாமல் அதிகாரங்கள் பறிக்கப்பட்டது. முன்னாள் ஆளுணர் ஒரு இரானுவ ஆட்சியே நடாத்தினார்.

கேள்வி – அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் கொண்டு வந்த சவுதி வீடமைப்பத் திட்டத்தினை சுனாமியினால் பாதிக்கபட்ட மக்களுக்கு இன்னும் பகிர்ந்தளிக்கப்படவில்லை.

பதில் – இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு இந்த வழக்கினை கொண்டு வந்த சிகல உருமைய கட்சியினருடன் பேசி ஒரு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மவாட்டம் வறுமைக் கோட்டில் கீழ் உள்ளது. இம் மாவட்டத்தில் 75 வீதமான தமிழ் மக்களும் 22 முஸ்லீம்களும் வாழ்ந்து வருகின்றனர்.

முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமீன் தலைமையில் ;நடைபெற்ற அரசியல் குழுவில் ஏகமானதாக என்னை முதலமைச்சர் ஆக வருவதற்கு தீர்மாணம் எடுத்தபின்பே எனக்கு நியமனம் வழங்கப்பட்டது. ஆகவே கட்சிக்குள் எவ்வித பிளவும் இல்லை.

This slideshow requires JavaScript.

Advertisements