கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட் நேற்று திருகோணமலையில் கிழக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டத்தில் ஆற்றிய உரை


தொகுப்பு – அஷ்ரப் ஏ சமத்

நேற்று திருகோணமலையில் கிழக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டம் நடைபெற்றது. இந் நிகழ்வில் பொது நிருவாக, புத்த சாசன, நல்லாட்சி மற்றும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் கௌரவ கரு ஜயசூரிய கௌரவ கிழக்கு மாகாண ஆளுனர் , கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள், பிரதம செயலாளர் , மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
.
நமது இலங்கை அரசாங்கம் நாடு முழுவதிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளதோடு அந்த வகையில் பன்மைத்துவ அரசியல் செயன்முறை மற்றும் சிவில் நிருவாகத்தை தாபிப்பதன் ஊடாக ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க / முக்கியத்துவமிக்க அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கான எல்லா அத்தியாவசிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. 20 வருடங்களுக்குப் பிறகு மே மாதம் 2008 ம் ஆண்டு கிழக்கு மாகாணத்திற்கான மாகாண சபை தாபிக்கப்பட்டதன் பின்னர் பல உட்கட்டுமான செயற்திட்டங்களின் நடைமுறைப்படுத்தல் சிறந்த
வகையில் முன்னேற்ம் கண்டுள்ளது.

வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல் மற்றும் இவைகளுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கில் முற்படுத்தப்பட்ட கிழக்கின் எழுச்சி மற்றும் ஏனைய அபிவிருத்தி முன்னெடுப்புகள் நியாயமான வகையில் வெற்றி கண்டுள்ளது. இவை அனைத்தும் பாராட்டத்தக்க அபிவிருத்திகளாகும்.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு மத்தியிலிருந்து மாகாணங்களுக்கு வளங்களின் பாய்ச்சலை நிச்சயப்படுத்துகின்ற பொறிமுறையொன்றை நிறுவுவதற்கும் மத்திய மாகாண உறவினை மீளமைப்பதற்குமான அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் நடவடிக்கைகளை நாம் வெகுவாகப் பாராட்டுகின்றோம், சிலாகிக்குகின்றோம். அதிகாரப் பகிர்வு, அதிகாரத்தைப் பங்கிடுவதற்கான மிக முக்கியமான ஆட்சிப் பொறிமுறையாக (ஆளுகைப் பொறிமுறையாக) மிகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது / அறியப்பட்டுள்ளது.

நினைவுக்கு அப்பாற்பட்ட காலந்தொட்டுஇ கிழக்கு மாகாணம் தனது பெறுமதிமிக்க வளங்களை அர்ப்பணம் செய்து நாட்டின் சுபீட்சத்துக்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் மகோன்னத சேவையினை ஆற்றியுள்ளது. 13வது திருத்தத்தினைத் தழுவி தனது பங்கினை ஆற்றுகையில் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான அனைத்து வளங்களையும் தற்போது கிழக்கு மாகாணம் தன்னகத்தே கொண்டுள்ளது.

அபிவிருத்தி தொடர்பானதும் ஏனைய விடயங்கள் தொடர்பானதுமான சவால்களை கையாள்வதற்கு மத்த்திய, மாகாண முகவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் தேவை பல சபைகளிலும், ஆய்வரங்குகளிலும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.

இத்தேவையின் அத்தியாவசியத்தன்மையை நான் கௌரவ அமைச்சர் அவர்களை கருத்திற் கொண்டு கேட்டுக் கொள்வது யாதெனில்இ மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையே எவ்வாறு மென்மேலும் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும் என்பதை மீண்டும் ஒரு தடவை நன்கு ஆராய வேண்டுவமென்பதாகும். அபிவிருத்தி சவால்களையும் ஆளுகை தொடர்பான பிரச்சினைகளையும் பரந்த நோக்கில் ஆராய்வதற்கான காலம் தற்போது மலர்ந்துள்ளது. நான் கூட நம்புகின்றேன்இ நான் நினைக்கின்றேன் நாம் ஒவ்வொருவரும் குறுகிய அரசியல் மற்றும் கருத்தியல் பிரிவினைகளில் இருந்து விடுபட்டு தேசிய நலனுக்காக செயலாற்றி இப்பிரச்சினைகளுக்கான அனுகுமுறையில் முற்றுமுழுதாக இலக்கு நோக்கியவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான வினைத்திறன்மிக்க வழிகளையும் உபாயங்களையும் கண்டுபிடிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் சமூகப் பிரிவுகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுமென வினயமாக கேட்டுக் கொள்கின்றேன்.

மத்திய அரசாங்கத்தையும் மாகாண சபையினையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் மாவட்ட செயலாளர்களும் பிரதேச செயலாளர்களும் இரட்டை வகிபங்கினை ஆற்றுகின்றனர். எனவே மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்குமிடையே அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் அவர்களின் கூட்டுறவு ஃ ஒத்துழைப்பு மிக இன்றியமையாததாகும்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நல்லாட்சியை அடித்தளமாகக் கொண்ட ஜனநாயக கட்டமைப்பு என்ற தூர நோக்கிற்கு நாம் முழுமையான ஆதரவினை தெரிவிக்கின்றோம். இதன் மூலம் மாகாணங்கள் புதிய உத்வேகத்துடன் அபிவிருத்தி அபிலாசைகளை அடையும் வகையில் சக்திப்படுத்தப்படும் என்பது எமது நம்பிக்கையாகும். இது அனைத்து மாகாணங்களையும் தத்தமது வளங்களை பயனுறுதி வாய்ந்தவகையில் பிரயோகித்து இலங்கையை உலக அரங்கில் தனக்கே உரித்தான இடத்தினை நோக்கி நகர்த்தக்கூடிய வகையில் இயலுமையுள்ளதாகவும் மாற்றக்கூடியது.

உள்ளூராட்சி
கிழக்கு மாகாணம் 3 மாநகர சபைகளையும் 5 நகர சபைகளையும் 37 பிரதேச சபைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உள்ளூராட்சி தொடர்பான விடயம் மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் வருகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் சமூகஇ சுகாதார சேவைகள் மற்றும் சமூக நலன்புரி சேவைகள் உள்ளிட்ட சேவைகளை உள்ளூர் சமூகங்களுக்கு ஆற்றுவதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி கையாள்கை அதிகாரம் மூலம் அவை பொறுப்புக் கூறும் தன்மையினை மேம்படுத்தவும்இ உள்ளூர் அரசியல்வாதிகள் தமது செயற்பாடுகள் தொடர்பாக பொறுப்புக் கூறுபவர்களாக மாறுவதற்குமான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இவை ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றன. கிழக்கு மாகாண சபைக்கு வரியினை திரட்டவும் அதனை உள்ளூரில் செலவிடுவதன் மூலம் இந்நிதி எவ்வாறு திரட்டப்படுகின்றதுஇ எவ்வாறு உள்ளூர் மக்களின் நலனில் செலவிடப்படுகிறது என்ற முடிவினை மேற்கொள்ளும்போது இம்முடிவுகளை மேற்கொள்வோர் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வழிவகுக்கும்.

இது உள்ளூர் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதோடு நாடு முழுவதும் ஜனநாயகத்தினை விரிவாக்குவதற்கு துணையாக அமைவதன் ஊடாக நல்லாட்சிக் கட்டமைப்பை தாபிப்பதற்கு பங்காற்றக்கூடியது.

எவ்வாறாயினும் மத்திய அரசாங்கத்தின் நிதி ஒழுங்குகளின் நிர்வாகத்தில் மாகாண சபையின் வகிபங்கினை திவாக கீழ்நிலைப்படுத்துகின்றது. எனவே உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி வளங்ங்கள் கிழக்கு மாகாண சபையினூடாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது விரும்பத்தக்கது. மேலும் உள்ளூராட்சி மன்றங்களின் நிதி மற்றும் ஆலோசனைக்குழுக்களை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புச் சொல்லும் தன்மையையும் நிச்சயப்படுத்த முடியும். மத்திய அரசாங்கத்திற்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்குமிடையிலான நிதி ஏற்பாடுகள் ஃ ஒழுங்குகள் சிக்கல் நிறைந்தவையாக காணப்படுகின்றது.

கல்வி
முன்னர் யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு மற்றும் பாடசாலை மற்றும் தொடர்புடைய உட்கட்டமைப்புகளின் அழிவினால் மாணவர்களின் கல்வி தடைப்பட்டிருந்தது. கல்விஇ உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலமும் கல்வித் துறை மனித வளங்களை அபிவிருத்தி ஊடாகவும் அனைத்து மானணவர்களுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தது. எவ்வாறாயினும் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் தேவையுடைய மாணவர்களின் நலன்களை அதிகரிப்பதற்குமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சுகாதாரம்
கடந்த காலங்களில் யுத்த நிலைமை மற்றும் பொருளாதார பின்னடைவு காணப்பட்ட போதும் இலங்கை தனது சுகாதார குறிகாட்டிகளை திருப்தியடையும் மட்டத்தில் பேணி வந்துள்ளது. சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளை மீள்நிர்மாணம் செய்வதற்கும் சுகாதாரத் துறையிலுள்ள மனித வளத்தினை விருத்தி செய்வதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார சேவைகள் பின்தங்கிய பிரதேசங்களுக்கும் சென்றடையும் வகையில் கூடுதலான வைத்தியர்களும்இ துணை மருத்துவ உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டனர்.

அதிகரித்துவரும் தொற்றா நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற புதிய மருத்துவ சவால்களை வெற்றிகொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளன.
விவசாயம்

கிழக்கு மாகாணம் விவசாயத்தை அடிப்படையாக்க் கொண்ட பொருளாதாரம் என்ற வகையில் வளர்ச்சிக்கும் அபிவிருத்’திக்கும் நீர்ப்பாசன வலையமைப்புகளில் பெரிதும் தங்கியுள்ளது. இம்மாகாணத்தின் விவசாய அபிவிருத்தி குளங்களில் தேக்கப்படும் பருவகால மழை நீரிலேயே தங்கியுள்ளது. மேலும் 60மூ க்கும் மேற்பட்ட சனத்தொகையின் விவசாயம் சார்ந்த செயற்பாடுகளில் தங்கியிருப்பதோடு கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் விசேடமான வகையில் நெற் செய்கையிலேயே தங்கியுள்ளது. போதுமான அளவு நீர்ப்பாசன முறைமை மற்றும் நீர் வளங்கள் எமது மாகாணத்தில் கிடைக்கக் கூடியதாக உள்ளது என்பது தெளிவான விடயமாகும். கிழக்கு மாகாணத்தின் விவசாயத் துறையில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான மத்திய அரசாங்கத்தின் உதவிகள் பெரிதும் வேண்டப்படுகின்றது.

முதலீட்டு ஊக்குவிப்பு
கிழக்கு மாகாண சபை முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இது கிழக்கு மாகாணத்தின் கொள்கை முன்னுரிமைகளுக்கு இசைவாக தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் முதலீட்டு ஊக்குவிப்புக்கான கொள்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. இதில் முதலீட்டு செயன்முறைகளுக்கு வசதியளித்தல்இ ஒழுங்கு நடைமுறைகளை கண்காணித்தலும் மனிதவள அபிவிருத்தி மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தியை துரிதப்படுத்தல் என்பன அடங்கும்.
கிழக்கு மாகாணத்தை கவர்ச்சிகரமான முதலீட்டுத் தளமாக மாற்றுவதற்கு மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் உதவிகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.

சுற்றுலாத்துறை
யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். யுத்தம் முடிவடைந்த்தன் பிற்பாடு கிழக்கு மாகாணம் உலகின் தலைசிறந்த சுற்றுலாத் தளமாக உருவெடுத்துள்ளது. கிழக்குக் கடற்கரை அதன் வெண்மணற் கடற்கரைகளுக்கும் நீர் விளையாட்டுக்களான ளுரசகiபெ இற்கும் பெயர்போனதாகும். மேலும் கிழக்கு மாகாணம் அதிக இயற்கை கவர்ச்சிகளையும் வரலாற்று முக்குயத்த்துவம் மிக்க இடங்களையும் கொண்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகையை அதிகரிப்பதற்கு அத்துறையில் மனிதவள அபிவிருத்தி மற்றும் விளம்பர நடவடிக்கைகளை அதிகரிப்பது அவசியமாகும். இதற்காக மத்திய அரசின் உதவி பெரிதும் வேண்டப்படுகின்றது.

கௌரவ அமைச்சர் அவர்களே, கிழக்கு மாகாணம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக தங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக வாய்ப்பினை வழங்கியமைக்கு நன்றி கூறுகின்றேன். இந்த அம்சங்கள் மத்திய அரசின் கவனத்தினை ஈர்க்கும் என்பதுடன் இது விரைவான நிலைத்துநிற்கின்ற வளர்ச்சியினை அடைய உதவுமென்பதும் எனது நம்பிக்கையாகும்.

கடந்த காலங்களில் தங்களால் வழங்கப்பட்ட உதவிகளுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி கூறிக் கொள்வதோடு எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் எழும்போது இவ்வாறான உதவிகள் வழங்கப்படுமென்ற உறுதியான நம்பிக்கையுடன் உள்ளேன் என்பதனையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் நசீர் அஹமட் உரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

Advertisements