சிரேஷ்ட பத்திரிகையாளர் ஏ.எஸ்.புல்கி மறைவு


– ஜுனைட் .எம்.பஹ்த், அஸ்ரப் ஏ சமத் – 

சிரேஷ்ட பத்திரிகையாளர் ஏ.எஸ்.புல்கி இன்று (25.2.2015) காலை காலமானார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்”.

கடந்த ஏழு மாதங்களாக கடும் நோய் வாய்ப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று காலை மரணமாகியுள்ளார். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் தனக்கென தனியான இடத்தினைப் பெற்றிருந்த புத்தளம் பிராந்திய செய்தியாளரான அவர் பல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு பிராந்திய செய்தியாளராக பணியாற்றியுள்ளதுடன், சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

அவர் 68 வயது வரை ஊடகத்துறையில் ஆற்றிய சேவைகள் நினைவு கூறப்படவேண்டியதாகும்.

கடந்த 4 தசாப்தங்களாக புததளமாவட்டத்தில் சகல நிகழ்வுகளிலும் தமது புகைப்படக்கருவி, பேனா, வீடியோ கருவிகள் முலம் பிரதேச ஊடகவியலாளாராக செயல்பட்ட காலம்சென்ற புல்கி, கடந்த 4 மாதகாலமாக மிகவும் நோய்வாய்பட்டு தொழில் இன்றி மிகவும்  கஸ்ட நிலையில் வைத்தியசாலையிலும் வீட்டிலும் இருந்து வந்துள்ளாா். ஆனால் இவரது நோய்வாய்ப்பட்ட காலத்தில் ஊடக சமுகமோ அல்லது முஸ்லீம் தனவந்தா்கள் அரசியல்வாதிகள் சென்று உதவ முன்வராத செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.  ஆகக்குறைந்தது சுயாதீன் தொலைக்காட்சி தமிழ் நிருபா்கள் ஒன்று சோ்ந்து உதவ ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. அதுவும் கை கூடாமல் போகிவிட்டது. இந்த அவலம் ஏனைய பிரதேச ஊடகவியலாளா்களுக்கும்  ஏற்படக் கூடாது. அவா்களுக்கு கைகொடுக்க உதவ முன்வருவோமாக
காலம் சென்ற புல்கிக்கு  கடந்த 2013 ல் கலாபூசனம் விருது கிடைத்தது. புத்தகத்தின் ஒரு நடமாடும் புத்தகத்தை இழந்திருப்பது புத்தளம் மண்ணின் ஈடுசெய்யப்பட முடியாத இழப்பாகும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிராத்திப்போம்.

This slideshow requires JavaScript.

Advertisements