இஸ்லாம் அழகிய நற்குணங்களயும்,ஓழுக்க விழுமியங்களையும் கொண்ட ஒரு மார்க்கம் – சிரேஷ்ட ஊடகவியலாளர் மிப்றாஹ் முஸ்தபா


– ஜுனைத் எம் பஹ்த் –

உங்களில் சிறந்தவர் அழகிய முன்மாதிரிகளான நற்குணங்கள் உடையவர்கள்,ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிப்பவர்கள். எந்த சூழ்நிலைகளிலும் நிதானம் தவறாமல் அவதானமாக செயற்படல்வேண்டும்.

இஸ்லாம் சண்டித்தனத்தால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல,ஏனையோர் எண்ணிக் கொண்டுடிருப்பது போல் வாளால் பரப்பப்பட்டதும் அல்ல .

நபிகளார்(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை வழிமுறைகளை முன்மாதிரியாகக் கொண்டசமூகம் நமது முஸ்லிம் சமூகம்.

இஸ்லாத்தை கவர்ந்து இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்து கொண்டவர்கள் அல்குர்ஆன் போதனையிலும் ,நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளுமே எங்களை இஸ்லாத்தின் பக்கம் கவரச் செய்துள்ளது என்ற கோஷத்தை உலகுக்கு உரத்துச் சொல்ல வைத்தது இஸ்லாம்.

எனவே,தூய மார்க்கம் இஸ்லாம் என சவூதிஅரேபியாவில் மட்டுமல்லாமல் எங்கு கற்றாலும் அது தலைக்கனமாக மாறக் கூடாது.

பல்லின சமூகம் வாழும் மக்கள் மத்தியில் எங்களது “அஹ்லாக்” நற்பண்புகள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் எல்லா சமூகங்களுக்கும் ஏற்றது.

இவ்வாறு எமது நடத்தைக் கோலங்களில் மாற்றத்தை நிதானமிழக்கும் சண்டாளர்கள் ஏற்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும் .

சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை வெளிக்கொணரவேண்டும்.மக்கள் மன்றம் அதனை அறியவேண்டும்.ஒரு அறைக்குள் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசி மறைக்கமுடியாது.

இஸ்லாம் காட்டித்தரும் உதாரணங்கள் மூலம் நடுநிலைமையிலிருந்து சிந்திக்கும் பக்குவமிருக்கும்மானால் ஊடகவியலாளர்கள தாக்க முற்படமாட்டார்கள்.

எனவே அன்மையில் பொறுப்பு வாய்ந்த ஒரு ஆய்வு கூட்டத்தின் பின்னர் சினம் கொண்ட அறிவாளியொருவர் சண்டித்தனத்தில் பேனாவுக்கு வேட்டு வைக்க எத்தனித்தார். அரட்டலுக்கு பேனா சதாகாலமும் ஓயமாட்டாது என்ற சிந்தனையை அவர் விளங்கிக் கொள்ளவேண்டும்.

இஸ்லாத்தை பக்குவமாக போதிக்க பழகிக் கொள்ள வேண்டும்.”அஹ்லாக்” எனும் நல்ல பண்புகள் எங்களிடத்தில் மிளிர வேண்டும்.ஊர் கடந்து துறையூரில் மார்க்கக் கல்வி போதிக்கும் எங்களிடத்தில் அன்பு,இரக்கம்,மென்மையான மனசு, நற்பண்புகள்,ஒழுக்க விழுமியங்கள் முக்கியம்.

ஊடகத்துக்குவிடும் அச்சுறுத்தலை இந்த நல்லாட்சியில் விலை கொடுத்து இரத்தம் சிந்தாமல் பெற்ற ஜனநாயக ஆட்சியில் அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனை நாம் அவருக்கு வழங்குகிறோம்.

Advertisements