வௌியேறினார் திமுத் கருணாரத்ன – குஷல் ஜனித்துக்கு வாய்ப்பு


இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன காயம் காரணமாக உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வௌியேறியுள்ளார்.

நேற்றைய தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது, அவரது இடது கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய கூறியுள்ளார். இதன் காரணமாக திமுத் கருணாரத்னவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், நான்கு வாரங்களுக்கு விளையாட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் நாடு திரும்பவுள்ள திமுத் கருணாரத்னவுக்கு பதிலான சுழல் பந்து வீச்சாளர் சீக்குகே பிரசன்னவை விளையாட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காயமடைந்த இலங்கை அணி வீரர் ரங்கன ஹேரத்துக்கு பதிலாக தயார்நிலை வீரராக சீக்குகே பிரசன்ன அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பின்னிணைப்பு

காயமடைந்த திமுத் கருணாரத்னவுக்கு பதிலாக குஷல் ஜனித் பெரேரா தயார் நிலை வீரராக அவுஸ்திரேலியா புறப்பட்டுச் செல்லவுள்ளார்.(ADT)

Advertisements