பர்தாவுக்கு எதிரான தடையை கானா அரசு நீக்கி கொண்டத மகிழ்ச்சியில் கானா நாட்டு முஸ்லிம்கள்!


– ஜுனைத் எம் பஹத் –

கானா மேற்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் ஒரு சிறிய நாடு. அதன் தலைநகர் அக்ரா ஒரு அழகிய கடற்கரை நகரம். கானா நாட்டின் ஜனத்தொகை 2.3 கோடி. அதில் 60% கிருத்துவர், 15% முஸ்லீம்கள், 25% ஆப்பிரிக்கப் பழங்குடி மதத்தின் வம்சாவளியினர்.

எல்லா காலனிகளையும்போல ஆங்கில ஆதிக்கத்தின் துணையுடன் மதமாற்றத்தால் கிறிஸ்த்துவ மதம் பரவிய நாடு அது.

கிருத்துவ பெருபாண்மையை கொண்ட இந்த நாட்டில் முஸ்லிம்கள் பல்வேறு அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் மத சுதந்திரம் என்பது அறவே இல்லாமல் இருந்த நாடு கானா முஸ்லிம் பெண்கள் பார்தா அணிவதற்கு தடை விதித்திருந்த நாடுகளில் ஒன்றாக தான் கானா இருந்து வந்தது.

இதை எதிர்த்து முஸ்லிம்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வந்தனர் இந்த போராட்டத்தின் பலனாக சில தினங்களுக்கு முன்பு கானாவின் அதிபர் ஜான் மாஹாமா சில அறிவிப்புகளை வெளியிட்டர். அந்த அறிவிப்பில் மத சுதந்திரத்தைப் பறிக்கும் விதத்தில் சில அடக்கு முறைகளை இந்த அரசு மேர் கொண்டது தவறு என்றும் அதற்காக வருத்துவதாகவும் கூறிய அவர்.

குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் கல்வி நிலையங்கள் அரசு அலுவலகங்கள் மருத்துவமனைகள் போன்ற வற்றிர்கு பர்தா அணிந்த நிலையில் வரககூடாது என்று விதித்திருந்த தடை தவறானது என்றும் அந்த தடை நீக்கி கொள்ளப் படுவதாகவும் பர்தா அணிவது உள்ளிட்ட அனைத்து மத சுதந்திரமும் இஸ்லாமியர் உள்ளிட்ட அனைத்து மதத்தவர்களுக்கும் வழங்க படுவதாகவும் கடந்த வியாழன் அன்று அந்த நாட்டின் அதிபார் ஜான் மஹாமா தெரிவித்தார்.

இது அந்த நாட்டுமுஸ்லிம் களிடையே மிகுந்த மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது இதுபற்றிமருத்துவ கல்லுரி மாணவர் முஹம்மது கவ்சர் கூறும். போது

கானாவி்ன் வரலாற்றில் இது முக்கிய திருப்பு முனை என்றும் முஸ்லிம்கள் தங்கள் மத அடையாளங்களை வெளிபடுத்த கிடைத்திருக்கும்இந்த வாய்ப்பு கானாவில் இஸ்லாத்தின் வளர்ச்சியை வேகப்படுத்தும் என்றும் கூறினார்.

Advertisements