காத்தான்குடி கல்விப் பிரிவுக்கான வருடாந்த விளையாட்டு விழாவில்- காத்தான்குடி மத்திய கல்லூரி முதலிடம்


-பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி கல்விப் பிரிவுக்கான வருடாந்த விளையாட்டு விழா 16-05-2015 நேற்று திங்கட்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

??காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இவ் விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் பொருளதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,தற்போதய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்; கலந்து கொண்டார்.
காத்தான்குடி கல்வி கோட்டத்திலுள்ள 30 பாடசாலைகள் பங்கேற்ற இவ் விளையாட்டு விழாவில் முதலாவது இடத்தை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையும் இரண்டாவது இடத்தை காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையும் மூன்றாவது இடத்தை பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலயமும் பெற்றது.
இதன் போது அதிதிகளினால் விளையாட்டு விழாவில் வெற்றயீட்டிய பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழும் ,பரிசும் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவ் விளையாட்டு விழாவில் சவூதி நாட்டின் றியாத் அல்-இமாம் சுஊத் பல்கலைக் கழகத்தின் தொலைக் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் அஹ்மத் அஸ்ஸூதைஸ்,சர்வதேச மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் கிழக்காசிய பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரி அஷ்ஷெய்க் காலித் அத்தாவூத் , காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் முபாறக்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள கல்விப் பணிப்பாளர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ,மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலதிக புகைப்படங்களை நீங்கள் பார்வையிட எமது முகநூல் (facebook) பக்கத்தில் பார்வையிடலாம்
லிங்க்-https://www.facebook.com/kattankudy.org

Advertisements