வாழைச்சேனை ஆஸ்பத்திரியில் பிரசவ வார்ட்டில் நடந்த கொடுமை !


மட்டக்களப்பில் ஏன் இலங்கை தாய் நாட்டில் பிறந்த தாய், சகோதாிகள் உள்ள அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய கொடுமை இது !

இது வாழைச்சேனை ஆதார லைத்தியசாலை மகப்பேற்றுப் பிரிவில் ஒரு ஏழைத்தாய் தனது பிரசவத்திற்காக வேதனையுடன் இரவு வேளையில் சென்ற சமயம் அத்தாய்க்கு நடந்த சோகம் நிறைந்த அநீதி.

நாங்கள் (மக்கள்) நாட்டுக்காக கொடுக்கும் வாிப் பணத்தின் மூலம் சம்பளம் பெறும் அரசாங்க அதிகாாிகள் அதிலும் ஒரு அரசாங்க அதிபரை விட அதிக சம்பளம் பெறுகின்ற வைத்தியா்கள் தமது கடமைகளை உதாதசீனம் செய்வது எவ்வகையில் ஏற்றுக்கொள்வது.?

அழைக்கும்போது சேவை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டிய பொறுப்புவாய்ந்த அதேநேரம் அரச சம்பளம் அளவில்லாத மேலதிக ஓவர்டைம் கிம்பளம், இன்னும் படிகள் எல்லாவற்றையும் மாதம் தோரும் வாங்கிக் கொண்டு வேலை நேரத்திலும் பிரைவேட் பிரைவேட் என்று சம்பாதித்து பணத்தை கத்தை கத்தையாக சம்பாதிக்கும் இவா்கள் நாட்டுக்காக அல்லது மக்களுக்காக என்று இல்லாவிட்டாலும் படைத்த இறைவனுக்காக அல்லது மனச்சாட்சிக்காகவாவது கொஞ்சம் தம்மை நாடிவரும் மக்களுக்கு (நோயாளிகளுக்கு) சேவை செய்ய மாட்டா்களா?

இவா்களை தட்டிக் கேட்க சட்டத்தில் இடமில்லையா ?
மீராவோடை கிராமத்தில் வசிக்கும் குறித்த பாதிக்கப்பட்ட இந்த அபலைத் தாயினால் தனக்கு உாிய நீதி கிடைக்க வேண்டும் எனக் கோாியும் தனக்கு ஏற்பட்ட பாரபட்சமான துயரச் சம்பவம் இனிமேல் வேறு எந்த ஏழைத் தாய்க்கும் ஏற்படக் கூடாது என்ற நன்னோக்கில் முறைப்பாடுகள் செய்து நீதியை எதிா்பாா்த்துக் காத்திருக்கும் இத்தாய்க்கு நாமும் எமது ஆதரவைத் தொிவப்போம்.

பிரசவ காலங்களில் எமது பெண்கள் எதிா்நோக்கும் ஆபத்துக்களிலிருந்து அவா்களைப் பாதுகாக்குமாறு குரல் கொடுப்போம்

(நல்ல வைத்தியா்கள் இதற்கு விதிவிலக்கு)

குறித்த தாயின் நேர்காணலை பின்வரும் இணைப்பில் காணலாம்.

https://www.youtube.com/watch?v=fdmpx3kQUZs

– நன்றி : மடவளை செய்தி இணையம்