ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம்!


தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டினால் சுட்டுக்கொல்ல இலங்கை கடற்படைக்கு உரிமை உள்ளது என்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அருகே சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நேற்று  (23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.(ADT)

Advertisements