பெண்ணை வல்லுறவுக்குட்படுத்திய தந்தை, சகோதரன் , மாமா


இந்தியாவின், மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பாய்குரி மாவட்ட த்தில் 16 வயது பெண்ணொருவர் தனது தந்தை, சகோதரன் ,மாமாவினால் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

child abuse 123_30இச் சம்பவம் தொடர்பில் அப் பெண் , பள்ளி ஆசிரியரின் ஊடாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தன்னை மேற்குறிப்பிட்ட மூவரும் இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக வல்லுறவுக்குட்படுத்தியாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

தான் இக்காலப்பகுதியில் 2 முறை கர்ப்பம் தரித்ததாகவும் , 4 முறை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த தாகவும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தனது தாய்க்கு தெரியுமெனவும் , அவரது அனுமதியுடனேயே இது நடைபெற்றதாகவும் குறித்த பெண் அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட குறித்த பெண் இது தொடர்பில் தனது பள்ளி ஆசிரியர் ஊடாக பொலிஸில் முறைப்பாடு செய்து செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெண்ணின் தந்தை, மாமா  மற்றும் சகோதரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

-SN-

Advertisements