முன்னாள் ஜனாதிபதிக்கும் முன்னாள் அமைச்சருக்கும் ஆதரவானவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபாடு


-அஸ்ரப் ஏ சமத்-

முன்னாள் ஜனாதிபதிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் ஆதரவான சமுர்த்தி தொழிற்சங்கம் நேற்று 24/04/2015 பத்தரமுல்லை செத்சிரிபாயவில் முன்றல் ஆர்ப்பாட்டம்.

சமுர்த்தி வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் உருவ பொம்மையும் அங்கு கொண்டுவரப்பட்டது. இருதியாக வீடமைப்பு சமுர்த்தி அமைச்சின் செயலாளர் செத்சிரிப்பாயவின் முன் வசாலுக்கு வரவளைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக் காரர்களினால் மனு கையளிக்கப்பட்டதன் பின் கலைந்து சென்றனர்.

பாரளுமன்ற உறுப்பிணர் நாமல் ராஜபக்ச வின் தலைமையிலான இளம் 8 பாராளுமன்ற உறுப்பிணர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.

இன்று காலை 10 – 12 மணிவரை பத்தரமுல்லை மெயின் வீதி முடப்பட்டிருந்தது. செத்சிரிபாயவில் உள்ள சகல முன் வாயல்கள் கேட்டுக்களும் பொலிசாரினால் பூட்டப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. செத்சிரியாய முன்றலில் சமுர்த்தி தொழிற்சங்க ஊழியர்கள் நடு வீதியில் உற்காந்திருந்து அமைச்சர் சஜித் பிரேமாதாசவுக்கு எதிராக கோசமிட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம சமுர்த்தி உத்தியோகாத்தர் தொழிற்சங்கத் தலைவரும் மேல்மாகாணசபை உறுப்பிணருமான ஜகத் குமார தலைமையில் நடைபெற்றது. இப் ஆர்ப்பாட்டத்தின்போது பின்வரும் கோசங்களை எழுப்பினர். அமைச்சர் சஜித் சமுர்த்தி திணைக்களம் மற்றும் திவிநகும நிதிகளை அவரது ஹம்பாந்தோட்டை கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கி வருகின்றார்.

சமுர்த்தி ஊழயிர்கள் 8500 பேர்களது ஊழியர் சேமலாப நிதி முதல் பெற்றுத் தருவதாகச் வாக்குறுதி அளித்த அமைச்சர் சஜித் இதுவரை அதனைப் பெற்றுக் கொடுக்க அவரால் முடியவில்லை. அதற்கான நிதியை நிதியமைச்சர் ரவி கருனாநாயக்க கொடுக்க மறுக்கின்றார்.

சமுர்த்தி ஊழியர்களுக்கு அரசியல் பழிவாங்கள் நடைபெறுகின்றது. சகல ஊழியர்களது கடமைகள் பறிக்கப்படுகின்றன. இடமாற்றம் ஜ.தே.கடசி சமுர்த்திக்குள் உட்புகுந்து இந் நிறுவனத்தை சீர்குலைக்கின்றது. அத்துடன் 100 நாள் வேளைத் திட்டத்தில் எவ்வித வேலைத்திட்டங்களும் இந்த சமுர்த்தி திணைக்களத்தினால் புதிய அரசினால் நடைபெறவில்லை. எனக் கோசமிட்டனர்.

ஊழியர்களுக்கு ஆகக் 25 ஆயிரம் ருபா சம்பளம் மற்றும் பிரயாணக் கொடுப்பணவு மோட்டார் சைக்கள் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைலைமையில் இநத அமைச்சினால் மக்கள் பாரிய அபிவிருத்திகளையும் நன்மைகளை பெற்றனர். அவைகள் தற்போதைய அமைச்சரினால் இடை நிறுத்தப்பட்டு ஊழியர்கள் அலுவலகங்களில் முடக்கப்பட்டுள்ளனர்.

சமுர்த்தி கொடுப்பணவு ஏழை மக்களுக்க 200 வீதமாக வழங்குவேன் என இந்த அரசு சொல்லியும் இதுவரை வழங்கப்படவில்லை என கோசங்களை எழுப்பிணர்.

More Photos- www.facebook.com/kattankudy.org