நிலநடுக்கம் ஏற்பட காரணம் பெண்களின் ஜீன்ஸ்…


பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் தான் உலகில் நிலநடுக்கம் ஏற்படுவதாக பாகிஸ்தான் அரசியல் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாமியா உலமா இ இஸ்லாமி பஸ்ல் கட்சியின் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான். உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட பெண்கள் ஜீன்ஸ் அணிவது தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் தான் உலகில் நிலநடுக்கம் ஏற்படுவதுடன் விலைவாசி உயர்கிறது, பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. பாகிஸ்தானில் ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு எதிராக ராணுவத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பினரை தாக்குவதை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்திக் கொள்ள வேண்டும். தாலிபான்கள் மீது தவறு இல்லை. தாலிபான்கள் நம் சகோதரர்கள். நம் நாட்டின் மீதான அவர்களின் கோபம் நியாயமானது. தாலிபான்கள் நடத்தும் தற்கொலைப்படை தாக்குதல் எல்லாம் அல்லாஹ்வின் கோபம் ஆகும். ஆகவே பாகிஸ்தானின் உண்மையான எதிரியான ஜீன்ஸ் அணியும் பெண்களை கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்றார்.(ADT)
Advertisements