நாடாளுமன்றத் தேர்தலில் SLMC மட்டக்களப்பில் தனித்து போட்டியிட வேண்டும்-றம்ழான்


-ஜுனைட்.எம்.பஹ்த்-

எதிர்வரும் நாடாளமன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் NK. றம்ழான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நாடாளமன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய ரீதியாக எந்தவொரு பொரும்பான்மைக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்தே போட்டியிட வேண்டும் அதன்போதே முஸ்லிம் காங்கிரஸினால் தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட்டு வந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பாதுக்க முடியும்.

Ramlanமுஸ்லிம் காங்கிரஸின் பரம எதிரிக் கட்சிகள் கூட்டாக அங்கம் வகிக்கும் அணியில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவதன் மூலம் கட்சியின் அரம்ப காலம் தொடக்கம் இறுதி வரையும் பாதுகாக்கப்பட்டு வந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டி நேரிடுவதுடன் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் வாக்கு மூலம் அக்கட்சியின் எதிரிகளுக்கு களம் அமைத்து கொடுக்கின்றதாகவும் அமையும் என்பதை கட்சித்தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன் தனித்து போட்டியிடுவதன் மூலம் கடந்த காலத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பட்டம் பதவிகளுக்காக காட்டிக் கொடுத்து தன்னை உருவாக்கிய கட்சியை அழிப்பதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சதி செய்து கட்சியின் முதுகில் குத்திவிட்டு தருனம் பார்த்து கட்சி மாறி துரோகம் இழைத்துச் சென்றவர்களின் அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து எதிர்வரும் பாராளமன்றத் தேர்தலில் அவர்களை தோற்கடித்து அரசியலிருந்து ஓரம்கட்டி மீண்டும் முஸ்லிம் காங்கிரஸை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பலமுள்ள சக்தியாக வளர்த்தெடுக்க கிடைத்திருக்கும் ஒரு அரிய சந்தர்ப்பமாகவும் இச்சந்தர்ப்பத்தை கட்சித்தலைமை நன்கு பயன்படுத்த வேண்டும்.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு துரோகம் இழைத்து விட்டுச் சென்றவர்களின் அரசியல் வாழ்வு இன்று முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கப்போகும் தீர்மானத்திலே தங்கியுள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது அத்தோடு கடந்த காலங்களில் கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சிக்கு சதி செய்த நயவஞ்சகர்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை சிறந்ததோர் தீர்மானத்தை எடுக்க வேண்டும் அதுவே கட்சியை பாதுகாக்கும் கடந்த காலத்தில் கட்சிக்கு கட்டுப்படாத கட்சிக்கு தெரியாமல் பதவி பெற்றவர்கள் இப்போது தான் வானத்திலிருந்தேனும் பாராளுமன்றம் செல்வேன் என்கின்ற பூச்சாண்டிக்களின் கூக்குரலுக்கு கட்சித்தலைமை செவிசாய்க்கக் கூடாது. அவர்கள் மக்கள் செல்வாக்கு அற்றவர்கள் அவர்களே கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸின் விழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள் என்பதை கட்சித் தலைமை அறிந்த விடயம் அவர்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்ப்பாளர் பட்டியலில் இடமளிக்கக் கூடாது.

அவர்களால் எதிர் காலத்தில் கட்சியை மட்டக்களப்பு மாவட்டத்தில் பலவீனப்படும் அத்துடன் தலைமையினால் எழுதப்படாத முஸ்லிம் காங்கிரஸ் யாப்பாக கடந்த காலத்தில் செயற்படுத்தி வந்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் விடயத்திலும் கட்சித் தலைமை எதிர் காலத்தில் மிகவும் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.