காத்த மண்ணில் மரம் செழிப்படைந்துவிட்டது -சறூக் ஜேபி


-முஹம்மட் றிகாஸ்-

இம்முறை எமது கட்சியுடன் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் அவருடைய அரசியல் பலமும் எம்மோடு.

தூய்மையான கட்சிக்கு வெற்றி. இதன் அடிப்படையில் பொறியியலாளர்கள் அப்துர் ரஹ்மான், சிப்லி பாறூக் ஆகிய இருவரும் முபீன் BA அவர்களுடன் கை கோர்த்து காத்த மண்ணின் வெற்றியை செழிப்படைய செய்வார்கள்.இவர்கள் மூவரும் ஒரே பாதையில்!

மகிந்தவின் கரத்தை முத்தமிட்டவர்கள் தோல்வி அடையச்செய்வது எமது மக்களின் பொறுப்பு, பசு தோல் போத்திய புலி போல் மகிந்தவின் அடிமை, மைத்திரியின் தோழன் என்று மக்களை ஏமாற்ற இருக்கின்றார் மகா அரசியல் வாதி!

SLMCமக்கள் அபிவிருத்திகளை மாத்திரம் பார்க்க வேண்டாம் இன்னும் ஒரு நல்லாட்சியாலர்களுக்கு இடம் கொடுங்கள். இது உங்களின் எதிர்கால சந்ததிகளின் அபிலாசை, தொடர்ந்து ஒரு அமைச்சரை ஊரில் தெரிவு செய்வது எமது மக்களுக்கு பலன் இல்லை. இவரோடு இருந்து அடாவடித்தனம் செய்பவர்தான் அனைத்தையும் அனுபவிக்கின்றார்கள். இம்முறை காத்தான்குடி மற்றும் இதை சுற்றி இருக்கும் கிராமங்களில் வாழும் அனைத்து மக்களும் சிந்தித்து செயல்படுங்கள்.

மாகாண சபை உறுப்பினர் ஜமீல் அவர்கள் முகவரி கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் ஐ விட்டு முதுகு எலும்பு இல்லாத அரசியல் செய்யும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் முற்றுப்புள்ளி ஆகிவிட்டார். முட்டாள் தனமான முடிவு மூக்கை உடைத்துவிடும்.

எமது கட்சியை பலகீனப்படுத்துவதட்கு எந்த புத்திசாலிகளாலும் முடியாது. இம் முறை நாம் அம்பாறை மாவட்டத்தில் 03 அல்லது 04 ஆசனங்களை பெறுவோம். இவரின் மாறுதல் கூட எங்களுக்கு வெற்றிதான். ஏதிர்காலத்தில் இவரும் ஓர் அரசியல் அனாதை தான். ஆ.இ.ம.காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் 5000 வாக்குகளை கூட எடுக்க முடியாமல் போகும்.

ஏற்கனவே நிஜாமுத்தீன் என்ற நபரும் கட்சி தாவியுள்ளார். இவரைப்போன்றவர்கள் சிறிய ஆயுத ரவைகளைப் போன்றவர்கள் இதை விட ப{ரங்கி போன்ற அரசியல் வாதிகளும் அங்கு இருக்கிறார்கள். ஹரிஸ் MP போன்ற பெரிய ஆயுதம் இருக்கும் போது ஜெமீல் சிறிய ரவை காயப்படுத்தத்தான் முடியுமே தவிர அழிக்க முடியாது.

MIM Zarook JP
SLMC
அமைப்பாளர்
காங்கேயனோடை

Advertisements