முஸ்லிம்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் அவர்களுக்காக களத்தில் இறங்குவோம் சாய்ந்தமருதில் ஆசாத் சாலி


-எம்.வை.அமீர்-

எங்களது பார்வையில் மகிந்தவும் ஒன்றுதான் மைத்தியும் ஒன்றுதான் ரணிலும் ஒன்றுதான். முஸ்லிம்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் அவர்களுக்காக களத்தில் இறங்குவோம் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாணசபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளமன்ற வேட்பாளருமான ஆசாத் சாலி, சாய்ந்தமருதில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

?

ஐக்கிய தேசியக்கட்சியை ஆதரித்து அக்கட்சியின் வேட்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸ்ஸாக் அவர்களது தலைமையில் சாய்ந்தமருது பௌஸி விளையாட்டு மைதான முற்றலில் 2015-08-04ம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினரும் நடக்கவிருக்கின்ற பாராளமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளவருமான தயாகமகே மற்றுமொரு வேட்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை மற்றும் ஐக்கியதேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரச்சாரச் செயலாளரும் முஸ்லிம் கலாச்சார அமைச்சரின் இணைப்பாளருமான அஸ்வான் சக்கப் மௌலானா ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அஸீஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் குழுமியிருந்த சனத்திரள் மத்தியில், பொலிசார் ஒலிபெருக்கியை தடை செய்திருந்த நிலையில்  ஆசாத் சாலி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆசாத் சாலி, ரணில் வந்தால் பிரச்சினை வரும் என்றும், மகிந்த வந்தால் நின்மதியாக இருக்கலாம் என்றும், மகிந்த வந்தால் அவரது வீட்டுக்கும் கிரீஸ் மனிதன் வருவான் என்பதை மறந்து முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் அஸ்வர் கூறித்திரிவதாகவும் இப்படியானவர்களை எங்கு கொண்டு நிறுத்துவது என்றும், தாங்கள் அவ்வாறு கூறப்போவதில்லை என்றும் கூறிய ஆசாத் சாலி, எவாரான கஷ்டங்கள் வந்தாலும் முஸ்லிம் உம்மத்துக்காக நாங்களே முன்வருவோம் என்றும் தெரிவித்தார். இன்று முஸ்லிம்களின் தலைவர்கள் என்று கூறிக்கொடிருப்போர் இவர்களின் வாக்குகளைப்பெற்றுக் கொண்டு அவர்களை நட்டாற்றில் விட்டு தலைவர்கள் மட்டும் சுகபோகம் அனுபவிப்பதாகவும் இவ்வாறான தலைவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

17ம்திகதி சண்டியர்கள் அவர்கள் இல்லை என்று தெரிவித்த ஆஸாத் சாலி, அன்றையதினம் நீங்கள் தான் சண்டியர்கள் என்றும் நீங்கள் தான் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்தக்காலத்தில் மகிந்தவுடன் பாரிய வைத்தியர் குழாமே இருந்ததாகவும் இப்போது ஒன்றுமே இல்லாது செத்துப்போய் உள்ளதாகவும்  அவரோடு இருப்பதெல்லாம் அஸ்வர், டலஸ்அழகப்பெரும, தும்முல்லே விமல, உதயகம்மன்வில, சக்கர தினேஷ் போன்றவர்களே இருப்பதாகவும் தெரிவித்தார்.

தான் பாரிய அபிவிருத்திகளை கூறும் மகிந்த அவரை தெரிவுசெய்த மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினையை கூட கண்டுகொள்ளது கப்பால் போகாத துறைமுகத்தையும் மக்களுக்குப் பயன்படாத கட்டிடங்களையும் மட்டுமே கட்டியதன் ஊடாக தங்களது பொக்கட்டுக்களை மட்டுமே நிரப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் மகிந்தவின் யுகத்துக்குள் நாங்கள் புகுந்துவிடது முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கின்ற நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒற்றுமையுடன் வாக்களித்து ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியடைய வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மைத்திரிபால சிறிசேன அவர்கள் வென்று விடுவார் தாங்கள் தனிமைப்பட்டு விடுவோம் என பயந்த றவூப் நானா தபால்மூல வாக்களிப்பும் முடிந்த பின்பே வந்து சேர்ந்ததாகவும் இப்போதும் ஐக்கிய தேசியக்கட்சியே வெல்லும் என்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்துள்ளதாகவும் 22க்கு மேல் இருக்கவேண்டிய முஸ்லிம்களின் பாராளமன்ற பிரதிநித்துவம் 15 அளவில் குறையும் ஆபத்து இருப்பதாக கவலை தெரிவித்தார்.

நம்மிடையேயுள்ள இரண்டு சிறிய கட்சிகளும் ஐக்கியதேசியக் கட்சியுடனேயே இணைந்து கேட்கிறார்கள் என்று தெரிவித்த ஆஸாத் சாலி, அதற்குள் 30000வாக்குகளே உள்ள வன்னிக்குச் சென்றும் மட்டக்களப்புக்கு வந்தும் றிசாத்தையும் அமீர் அலியையும் இல்லாமல் ஆக்க முயச்சிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

சாத்திரக்காரனின்  கதையில் ஏமாந்த மகிந்த அவரதது தலையில் அவரே மணலை வாரிப்போட்டுள்ளதாகவும் பள்ளிவாசல்கள் மீது எப்போது அவர் கைவைத்தாரோ அன்றே அவரது முடிவுகாலம் ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்கும், எதிர்கால சந்ததிகளுக்கு நமது இலங்கையை சிறந்த முறையில் கையளிக்க விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் ஐக்கிய தேசியக்கட்சியையே ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஆஸாத் சாலி, ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிடும் சிறந்தவர்களை ஆதரிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Advertisements