நட்பின் சுவாரஸ்யம்: படித்து நினைவுகளை மீளுங்கள்


‘ஒரு சின்ன வேதனை வந்தாலும் அதை கோதுகின்ற கை நண்பன் கை
நாம் என்ன சாதனை செய்தாலும் அது நண்பன் தருகின்ற நம்பிக்கை’

இது நம்முடைய சினிமா பாடல் வரிகள் கூறுவது. ஆனால் இது உண்மையான ஒரு நட்பிடம் மட்டுமே என்பதும் இன்னொரு விதம்.

natpu1இந்த பரந்து விரிந்து கிடக்கின்ற உலகத்தில் வாழ்கின்ற மனித ஜீவிகள் எமக்கு உறவு என்பது பல விதமாக உண்டு. ஆனால் எத்தனை உறவு கிடைத்தாலும் எமக்கு எப்பொழுதும் எந்த உறவு அதிக நெருக்கமாக ஆறுதலாக இருக்கின்றதோ அதன் மீது தான் அதிக நாட்டம் இருக்கும் என்பது மனித இயல்பு.

ஓவ்வொரு மனிதனும் தனது இளம் பருவத்தில் தனது வயதை ஒட்டிய இன்னொருவரை தான் தேடுவார்கள். தங்கள் மனதின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும், தமது பொழுதினை சந்தோசமாக கழிக்கவும். ஏனெனில் அந்த வயதில் உள்ளவர்களுக்கு தானே அவர்களுடைய ஏக்கம் புரியும்.

என்ன தான் பெற்றோர்கள் பிள்ளைகளோடு ‘பிரண்ட்லியா’ பழகினாலும் பிள்ளைகளின் வயதுப்பிரச்சினைகள் தேவைகளை விருப்பங்களை மனதின் எண்ணங்களை முழுமையாக புரிந்து கொள்ள மாட்டார்கள். அதோடு எந்த நேரமும் பிள்ளைகளோடு நண்பர்களாக பழக முடிவதில்லை அவர்களால். எனவே இளம் பருவத்துக்கு மருந்து இளம்பருவத்தினர் தான் என்பதில்
சந்தேகமில்லை.

உலகத்தில் காதலர் தினம் முதியோர் தினம் சிறுவர் தினம் இப்படி எல்லாவற்றிற்கும் தினம் உண்டு. எப்பவுமே கூடி குழாவி மனதில் எதிர்பார்ப்பே இல்லாமல் பழகுகின்ற நட்புக்கு மட்டும் ஏன் தினமில்லை என்று நம்ம இளம் தலைமுறை கவலைப்பட கூடது என்று தான் ஜூலை 30ம் திகதியினை உலக நண்பர்கள் தினமாக ஏப்ரல் 2011 இல் அறிவிக்கப்பட்டது.

nadda1935ம் ஆண்டு ஐ.அமெரிக்காவின் நாடாளுமன்ற காங்கிரஸ் ஓகஸ்ட் முதல் ஞாயிறு உலக நட்பு தினமாக அறிவித்திருந்தது. ஆனால் அன்றய தினத்தில் இப்பொழுதும் இந்தியாவே நண்பர்கள் தினத்தை அனுஸ்டிக்கின்றது. ஏனைய அனேகமான நாடுகள் யூலை 30 இணையே நண்பர்கள் தினமாக கொண்டாடுகின்றன.

நட்பு பற்றி நம்ம பெரியவர்கள் இந்த உலகத்தின் படைப்புக்களில் உயர்ந்து விளங்கிய அறிவுக் களஞ்சியங்கள் என்ன சொல்லிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.’ என்றார் வள்ளுவர்.

ஆடை அவிழும்போது கை தானே சென்று கீழே விழாமல் காப்பது போல நண்பன் துன்பப்படும் போது ஓடி சென்று உதவுவது நட்பு என வள்ளுவர் விளக்கம் தருகிறார்.

நண்பர்களை பற்றி :கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன் இன்றைய நண்பர்கள் பற்றி எளிமையாக சொல்லியிருப்பார்.

பனைமரம், தென்னைமரம், வாழைமரம் .

பனைமரம் :
தானாக முளைத்து இதனக்கு கிடைத்த நீரை குடித்து தன்உடம்பையும்இஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்கு தருகிறது. அதேபோல் நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன் .

தென்னைமரம்:
தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது. அதுபோல நம்மிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.

வாழைமரம் :
தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன். இந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும் இது ஒரு பாடலின் வரிகள் என்கிறார் கண்ணதாசன்.

நட்பு என்ற பெயரில் ஏமாற்றுபவர்கள் :
எனக்கு கிடைத்த நண்பர்களில் நூற்றுக்கு ஒருவர், இருவர் தான் அப்படி கிடைத்தனர் .மற்றவர்கள் பணம் பறிக்க என்னிடம் இருந்தனர் இப்போது அவர்கள் கோழி மேய்க்கின்றனர் என கண்ணதாசன் குறிப்பிடுகிறார்.

உண்மை தான் நாம் படித்து வந்த கதைகள் பல நமது வாழ்விலும் இம்மூன்று வகையானவர்களை யும் காட்டுகின்றதல்லவா?

முன்னோர் காலத்தில் நட்பு:

பாரத கதையில் தன் செஞ்சோற்று கடனை அடைக்க சகோதரர்களுக்கெதிராக நண்பன் தீய செயல் புரிபவனாக இருந்தாலும் இறுதிவரை அவனுடனிருந்து உயிர் விட்ட கர்ணன் .

பார்க்காமல் நட்பு:
சங்க காலத்தில் கோப் பெருஞ்சோழன் -பிசிராந்தையார் நட்பு இதைவிட வேறு சரியான உதாரணம் இல்லை .
கோப்பெருஞ்சோழன் பற்றி கேள்விப்பட்டு பிசிராந்தையர் என்ற புலவர் அவன்மீது நட்பு கொண்டார் சோழ மன்னனும் புலவர் பற்றி அறிந்து இருவரும் பார்க்காமலே நட்பு கொண்டனர் . சில ஆண்டுகள் கழித்து சோழன் வடக்கிருக்க ( சாப்பிடாமல் இறைவனை நினைத்து உயிர் துறப்பது ) முடிவு செய்தான்.

naddஇதனை அறிந்து அவனுடன் மேலும் சிலர் வட கிருக்க முடிவு செய்தனர் . சோழன் புலவருக்காக இடம் அங்கு ஒதுக்கினான் அது போல புலவரும் அங்கு வந்து சேர்ந்தார். தமிழர்களின் வாழ்வில் நட்பு என்பது வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று .

இந்த நட்புக்கு பருவம் கிடையாது என்றும் எப்பொழுதும் எந்த வயதிலும் மலர்ந்து விடும். அந்த நட்பு என்ற கூட்டுக்குள் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி உண்மையாக இறங்கி வாழ்பவர்களுக்கு தான் புரியும் அந்த கூண்டுக்குள் உள்ள இரகசியம் மறறும் சுவையெல்லாம்.

இந்த நட்பினை பொதுவாக 3 கட்டமாக பார்க்கலாம்

பள்ளிப்பருவத்தில் நட்பு:-
பள்ளி என்பது நாம் வாழும் ச10ழலினை அண்டி அமையப்பெற்றிருக்கும் அல்லவா?
எனவே இங்கு கிடைக்கும் நட்பு உறவுகளாக கூட இருக்கலாம். இப் பருவத்தில் தான் சண்டை போட்டி பொறாமை எல்லாம் நிறைந்து கிடக்கும். ஆனால் இங்கு நண்பர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் ஆசிரியர்களையே தோற்கடித்து விடுவார்கள். அந்தளவு பலம் மிக்கது இந்த சின்ன கடுகுகளின் நட்பு கூடு.
நாள் முழுதும் அம்மா மடியில் தவழந்த குழந்தையை ஒரே நாளில் பள்ளியில் கொண்டே விடும் போது அழுகிற போல தான். 13 வருடம் பள்ளி மடியில் வாழ்ந்திட்டு ஒரே நாளில் விலகும் பொழுதும் அழுகின்றார்கள். மனம் உடைகின்றார்கள் நம் சிறுசுகள்.

உயர் படிப்பில்:-
இந்த பருவம் தான் மிக முக்கிய பருவம். பள்ளி பருவம் உடைந்து இங்கு வந்த இளசுகள் . புதிதாக எங்கெங்கோ இருந்து வந்து இணைந்து கொள்கின்றார்கள். புதிதாக ஒரு நட்பு கூட்டினை உருவாக்கி கொள்கின்றார்கள். இந்த பருவத்தில் பெண்களும் பெண்களும் ஆண்களும் ஆண்களும் என்று நட்பு கொள்வதினை விட பெண்களும் ஆண்களும் ஆண்களும் பெண்களும் என்று இணைந்து நட்பை வளர்பது தான் அதிகம். இப்படி வளரும் ஆண் பெண் நட்பு நம்ம சினிமா படங்கள் காட்டுவதை போல் காதலிலும் முடியலாம். அது வேறு. ஆனால் இந்த நட்பு மிக ஆழமாக நம்பிக்கையும் இறுக்கமும் புரிந்துணர்வும் உடையதாக அமையுமாம்.

வேலை செய்யும் இடத்தில்:-
ஒவ்வொருவரும் தொழிலுக்கு செல்லும் இடங்களிலும் தமது நட்பு கூண்டினை உருவாக்கி கொள்வார்கள். ஆனால் அது ஏற்கனவே கடந்து வந்த பள்ளி மற்றும் உயர்கல்வியில் அமைந்தால் போல் அமையாது. இங்கு ஏதோ ஒரு போட்டி மற்றும் தேவையின் அடிப்படையிலே அமையப்பெற்றதாகவும் நீடிப்பு தன்மை குறைந்ததாகவும் அமையப் பெறும். அவ்வாறு இங்கு உண்மையான நட்பு ஒன்று கிடைத்துவிட்டால் அது உண்மையில் நாம் செய்த பாக்கியம் தான்.

naddpu2முதுமையில் நட்பு:-
முதுமை என்பது பக்குவப்பட்ட பருவம் என்றாலும். நட்புக்கு இதுவும் தகுந்த பருவம் தான். இந்த பருவத்தில் உள்ள. நமது முதியவர்கள் தம்மை சூழவுள்ள தமது வயதினை அண்டியவர்களோடே அதிக நேரத்தை கழிக்க விரும்புவார்கள் . இதை நாம் நன்றாக அவதானிக்க முடியும் . எம்மை சூழவுள்ள பாட்டி பாட்டன் மார். மாலை வந்தால் போதும் யாராவது ஒருவர் வீட்டில் ஒன்று கூடி ஊர் கதை சொந்த கதை சோக கதை பழய கதை என எல்லாவற்றையும் பேச ஆரம்பித்து விடுவார்கள். இதனால் தான் நாம அதிகம் பேசினால் வீட்டில் அம்மா ஏசுவார் பாட்டி போல அலம்பாதே என்று. இது எல்லோருக்கும் அனுபவமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இப்படிப்பட்ட இந்த புனிதமான நட்பினை நாம் பேண இன்று செய்ய வேண்டியவை:-

நமக்கு நல்ல நண்பர்களை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லி இநம் நண்பர்களுடன் நேரிலோ இதொலைபேசியிலோ நம் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளவேண்டும்.

சில கருத்து வேறுபாடுகளால் நம்மை விட்டு பிரிந்து போன நண்பர்களுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு, அவற்றை மறந்துவிட்டு சிறிய நினைவு பரிசு கொடுத்து அவர்களுடன் மீண்டும் நட்பை புதுப்பிக்கும் நாளாக கொண்டாடலாம் .

இவ்வாறு எல்லா தினங்களுக்கும் கொடுக்கும் முன்னுரிமையை நண்பர்கள் தினத்திற்கும் கொடுத்து நட்பின் பெருமையை உணர்ந்து ருசித்து வாழ்வை வாழ்ந்திட வேண்டும்.

எது எவ்வாறோ நட்பு என்பது புனிதமான எல்லோருக்கும் கிடைக்க கூடிய வரப்பிரசாதம். அதனை நாம் ஒவ்வொரு வரும் அனுபவிப்பதில் தான் அதன் பெறுமதி தங்கியுள்ளது.