இஷாக் ஹாஜி: அநுராதபுர மாவட்ட முதல் முஸ்லிம் எம்.பி


அநுராதபுரம் மாவட்ட முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற நாமாத்தினை பிரபல தொழிலதிபரான ஏ.ஆர்.இஷாக் ஹாஜியார் நேற்று பெற்றுக்கொண்டார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அநுராதபுரம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட இவர், 44,626 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்த முதல் கடந்த 67 வருட காலப் பகுதியில் அநுராதபுர மாவட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு குரல்கொடுப்பதற்காக சிறுபான்மை சமூகத்தினை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவுசெய்யப்படவில்லை. எனினும் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இன்று வரை அந்த மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதியொருவர் மாகாண சபைக்கு  தெரிவுசெய்யப்பட்டு வருகின்றார்.

எனினும் பாராளுமன்றத் தேர்தலில் பல முஸ்லிம்கள் பல்வேறு கட்சிகளில் அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிடுவதனால் இந்த  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை பெறுவது மிகக் கடினமாக இருந்தது. இந்த நியையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் தொழிலதிபர் இஷாக் ஹாஜியார் பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்கப்பட்டு, 67 வருட முஸ்லிம் பிரதிநிதித்துவமின்னை எனும் குறைப்பாட்டினை இல்லாமலாக்கியுள்ளார்.

அநுராதபுரம், கலாவெல பிரதேசத்தினைச் சேர்ந்த இவர், சிங்கள மக்களின் வாக்குகளையும் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(VN)

Advertisements

One comment