ரணிலுக்கு 5,56,000 விருப்பு வாக்கு: தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சாதனை


தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகள் எண்ணிக்கையைப் பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதனை படைத்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 5,56,600 வாக்குகளைப் பெற்று அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுளளார்.

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பு வாக்கு பட்டியலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முதலிடம் வகிக்கும் அதேவேளை இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ள சுஜீவ சேனசிங்க 117, 049 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவும் வெற்றி பெற்றுள்ளார். அத்துடன் முஜீபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார் ஆகிய இரண்டு முஸ்லிம் உறுப்பினர்களும், மனோ கணேசனும் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர்.

மனோ கணேசனுக்கு சுமார் 69,000 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன.(DN)

Advertisements

One comment

  • 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ரணில் விக்கரமசிங்க அவர்களை விட விமல் வீரவன்ச அதிகம் வாக்குகள் பெற்றது எனக்கு மிகவும் துக்கமாகவும் அவமானமாகவும் இருந்தது.
    இந்த முறை ரணில் விக்கரமசிங்க அவர்கள் சாதனை படைத்தது மிகவும் பெருமை ஆகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது.
    முஸ்லிம் வாக்காளர்கள் ரணில் விக்கரமசிங்க,முஜிபுரஹ்மான், மரிக்கார் ஆகிய மூவருக்கும் வாக்களித்து இருப்பது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது
    Dr M.L.Najimudeen

    Like