காத்தான்குடி தாருல் அதர் அத்த அவிய்யா பள்ளிவாயல் தாக்கப்படவில்லை –பள்ளிவாயல் தலைவர் ரவூப்


– பழுலுல்லாஹ் பர்ஹான் –
 
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை இரவு நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் காத்தான்குடியில் வன்முறை இடம்பெற்ற இடங்களை சுட்டிக்காட்டும் போது தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாயலும் ,தாருல் அதர்

அத்த அவிய்யா பள்ளிவாயலும் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார் இது தொடர்பில் தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.ரவூபிடம் கேட்ட போது அவர் தெரிவிக்கையில் இந்த சம்பவத்தில் எமது பள்ளிவாயலான தாருல் அதர் அத்த அவிய்யா தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவோ முற்றுகையிடப்படவோ இல்லை என தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்துக்கள் எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் ஓடியோ வடிவில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.

Advertisements

One comment

  • உண்மை ஒருநாள் வெளியாகும் – அதற்குப்
    பொய்யும் புரட்டும் பலியாகும்
    Dr M.L.Najimudeen

    Like