காத்தான்குடி வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஸ்ரீ. மு. காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மட்டு வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வை


– பழுலுல்லாஹ் பர்ஹான் –
முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாக செய்தி வெளியானதையடுத்து கடந்த 21 வெள்ளிக்கிழமை காத்தான்குடியின் பல பாகங்களிலும் பட்டாசுகள் வெடித்து ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

அதன்போது ஏற்பப்பட்ட வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆதரவாளர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று 22 சனிக்கிழமை இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூரினார்.
அதனை தொடர்ந்து காத்தான்குடிக்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் காத்தான்குடியில் வன்முறைச் சம்பவம் இடம்பெற்ற காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள தேநீர் சாலைக்கும், தேசிய தெவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாயலுக்கும் நேரில் சென்று பார்வையிட்டதோடு இவ்; வன்முறை சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் யூ.பீ.திசாநாயக்க உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அத்தோடு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளருமான சிப்லி பாரூக்கின் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Advertisements

One comment

 • இது ஒரு பண்பட்ட கண்ணியமான அரசியல்வாதியின் நாகரிகமான நடவடிக்கையாகும். ரவூப் ஹகீம் அவர்கள் காயப்பட்டவர்களை சுகம் விசாரித்து ஆறுதல் வார்த்தை கூறினார். போலிசாரைச் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் குற்றவாளிகளைக் கண்டிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
  அதை விடுத்துத்தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டவரை நீக்குமாறு ஆர்ப்பாட்டம் பண்ணுங்கள் என்று கூறவில்லை.
  தலைவரிடம் இருந்து முதலில் சரியான அரசியல் பாடத்தைப் படித்துக் கொள்ளுங்கள்.
  பொறியியலாலர்களின் பொறிமுறைகள் எல்லாமே பிழையாக இருக்கின்றன.
  Dr M.L.Najimudeen

  Like