மஹிந்­தவின் ஊடகப் பேச்­சா­ள­ரிடம் நான்கு மணி நேரம் தீவிர விசா­ரணை


முன்னள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஊடகப் பேச்­சா­ள­ரான ரொஹான் வெலி­விட்ட நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் (எப்.சி.ஐ.டி) நேற்று தீவிர விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். சீ.எஸ்.என். தனியார் விளை­யாட்டு தொலைக்­காட்சி அலை­வ­ரிசை தொடர்பில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் பாரிய நிதி மோச­டிகள் தொடர்பில் இவ­ரிடம் இந்த விசார­ணைகள் நடத்­தப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

ரொஹான் வெலி­விட்ட கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சியின் போது சீ.எஸ்.என். தொலைக்­காட்சி அலை­வ­ரி­சையின் தலை­வர்­களில் ஒரு­வ­ராக இருந்­துள்­ள­மையும் இதன் போது இடம்­பெற்­ற­தாக முறை­யி­டப்­பட்­டுள்ள நிதி மோசடி தொடர்­பி­லேயே இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றுள்­ள­தா­க வும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அதன்­படி நேற்றுக் காலை 9 மணிக்கு கொள்­ளுப்­பி­ட்டியில் உள்ள நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அறி­வு­றுத்­தலின் பிர­காரம் வருகை தந்த ரொஹான் வெலி­விட்­ட­விடம் பிற்­பகல் 1 மணி­வரை விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. சுமார் 4 மணி நேர விசா­ர­ணை­களின் பின்னர் அவர் அங்­கி­ருந்து வெளி­யேறிச் சென்றார்.

நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கா­ரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் சீ.எஸ்.என். விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்தும் விசேட குழு இந்த விசா­ர­ணை­களை நடத்­தி­யது. தேவை ஏற்படுமிடத்து மீண்டும் விசாரணைக்கு அழைப்பதாக குறிப்பிட்டே ரொஹான் வெலிவிட்ட விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(vk)

Advertisements

One comment

  • இதுவெல்லாம் பொதுமக்களை ஏமாற்றும் வித்தைகள். ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. பொறுத்திருந்து பார்ப்போம்.
    Dr M.L.Najimudeen

    Like