போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிப்பதற்கு எதிர்ப்பு


போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பை வௌியிட்டுள்ளன. தேசிய புகையிரத சேவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை பிற்பகல் 3.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு செவிசாய்க்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.(ADT)

Advertisements

One comment

  • ஊழலுக்குப் பெயர் போனவர்களை ஏன்தான் அமைச்சர்களாக நியமிக்கின்றார்களோ தெரியாது.

    Like