ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரை நிகழ்த்த ஜனாதிபதி அமெரிக்கா பயணம்


ஐக்கிய நாடுகளின் 70 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று  அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக் குழுவினர் நேற்று முற்பகல் 10.25 அளவில் நாட்டிலிருந்து புறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமாதானம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான எதிர்நோக்கு என்ற தொனிப்பொருளின் கீழ், சர்வதேச நாடுகளின் அரச தலைவர்கள் பொதுச்சபைக் கூட்டத்தின் 70ஆவது அமர்வில் கருத்து தெரிவிக்கவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 30ஆம் திகதி பொதுச்சபை கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி மாநாட்டிலும் விசேட உரை ஆற்றவுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட இராஜதந்திரிகள் பலரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.(nf)

Advertisements