காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் பல ஆயிரக்கனக்கானோர் பங்கேற்பு


– பழுலுல்லாஹ் பர்ஹான் –
உலக முஸ்லிம்களின் இரு பெருநாள் தினங்களில் தியாகத்தை வலியுறுத்தும் பெருநாள் தினமான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை உலக முஸ்லிம்கள் இன்று வியாழக்கிழமை கொண்டாடி வருகின்றனர்.

இதற்கமைவாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த புனித ஈதுல் அழ்ஹாஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 24 இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு காத்தான்குடி அன்வர்பள்ளி கடற்கரைத் திடலில் இடம்பெற்றது.
பெருநாள் தொழுகை திடலில்தான் தொழவேண்டும் என்ற நபிவழிக்கேற்ப காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் வழமையாக ஏற்பாடு செய்து வரும் இந்தத் திடல் தொழுகையில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும்,குத்பாப் பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க். எஸ்.எல்.எம்.நஷ்மல் (பலாஹி) நிகழ்த்தினார்.
இதில் உலமாக்கள், அரசியல்வாதிகள், ஊர்பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஆன்கள் பெண்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த  இத்திடல் தொழுகையில் ஆண் பெண் கலப்பில்லாதவாறு ஒழுங்குகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Advertisements