கிழக்கு மாகாணசபை உறுப்பினராக சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம்.மாஹீர் நேற்று சத்தியப்பிரமானம்


– எம்.வை.அமீர் –

கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வெற்றிடத்திற்கு சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.இந்நிகழ்வு 2015-09-22 அன்று கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஆரிப் சம்சுதீன், எம்.ராஜேஸ்வரன், முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் ஆகியோருடன் புதிய மாகாண சபை உறுப்பினரின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Advertisements