சதங்களில் சாதனை படைக்கும் சங்கா


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார, இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் கிரிக்கெட் போட்டியில் தனது நான்காவது சதத்தினை நேற்றைய தினம் பெற்றுக்கொண்டார்.

இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் சரே அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் குமார் சங்கக்கார நொட்டிங்ஹம்ஷையர் அணிகெதிராக இடம்பெற்ற போட்டியின் போதே இந்த சதத்தைப் பெற்றுக்கொண்டார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய சரே அணி இரண்டாம் நாள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 378 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

குமார் சங்கக்கார 140 பந்துகளை எதிர்கொண்டு 4 பௌண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 101 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

Advertisements