சிம்ஸ் கேம்பஸ் முதல்வர் அன்வர் முஸ்தபாவின் தியாகத்திருநாள் வாழ்த்து


முஸ்லிம் சமூகம் இஸ்லாம் காட்டியவழியில் வாழ்ந்து ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரிமிக்க சமூகமாக வாழ  வேண்டும் என்பதை உணர்த்தும் இஸ்லாம் மார்க்கம். மனித சமூகத்தின் இருலோக வெற்றிக்கும்தம்மை அர்பணித்து வாழும்படியும் சக  மனித உணர்வுகளுக்கும் மதிப்பளித்து வாழும்  படியும் எமக்கு போதித்து உள்ளதை நாம் பின்பற்றி

நடக்கவேண்டும் என்பதை  தமது வாழ்த்துச்செய்தியில்  தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளம் பிரஜைகள் அமைப்பாளரும், கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளருமான அன்வர் எம் முஸ்தபா தெரிவித்துள்ளார். மேலும்  இந்த தியாமிகு திருநாளில் நாம் விட்டுக்கொடுப்புக்களுடன் செயற்படும் வகையில் எமது வாழ்வின் பணிகளை அமைத்துக்கொள்ளுமாறு பெருநாள் வாழத்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 ஹஜ்ஜூப் பொருநாளையிட்டு பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா  வெளியிட்டுள்ள இந்த பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இன்று உலகலாவிய முஸ்லிம்கள் தமது ஹஜ்ஜூப் பொருநாளை கொண்டாடுகின்றனர். இந்த தினம் என்பது முஸ்லிம்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடக் கூடியது. நபி இப்ராகிம் (அலை)அவர்களின் தியாகத்தை உலகமே கொண்டாடும் இந்த தினத்தில் நாம் நமது சகோதரத்துவத்தை சக இனங்களுடனும் பேணி ஒற்றுமையாக வாழ பிராத்திக்கிறேன்.
இன்றிலிருந்தாவது நாம் ஒற்றுமை  கருணை, அன்பு, தியாகம், என்பனவற்றை எமது வாழ்வில் கொண்டுவந்து சுபிட்சமான தினமாக நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூனும் நாளாக மாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.
அதே வேளை இன்றைய ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடும் உலக வாழ் அனைத்து இஸ்லாமிய உள்ளங்களுக்கும் தனது பொருநாள் வாழத்துக்களை தெரிவிப்பதாகவும்  தமது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Advertisements