ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் நகரத்தை சென்றடைந்தார்


ஐக்கிய நாடுகள் சபையின் 70 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு அமெரிக்காவிற்குப் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் நியூயோர்க் நகரத்தை சென்றடைந்துள்ளார்.

அங்கு இலங்கைக்கான வொஷிங்டன் மற்றும் நியூயோர்க் தூதுவர்கள் மற்றும் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரால் ஜனாதிபதிக்கு சிறப்பான முறையில் வரவேற்களிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 70 ஆவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(nf)

Mai 4 Mai 2 Mai 3

Advertisements