நாபீர் பௌன்டேசனின் தலைவர் யு.கே. நாபீர் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்செய்தி


– எம்.வை.அமீர் – 

மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் நாட்டில் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் தென்படுகின்ற நிலையில் முஸ்லிம்கள் தியாகச் சிந்தனையுடன், ஒற்றுமையாக செயலாற்ற இந்த தியாகத்திருநாளில் உறுதிபூணுவோமாக என நாபீர் பௌன்டேசனின் தலைவரும் நிர்மாணத்துறை முதுமாணியுமான அல்ஹாஜ் உதுமாங்கண்டு நாபீர் விடுத்துள்ள ஈதுல் அழ்ஹா’தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நபி இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) ஆகியோரின் அளப்பரிய தியாகத்தை வலியுறுத்தும் ஹஜ்ஜுப் பெருநாளை உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் கடந்த காலங்கலைப் போல பல்வேறு வேதனைகளுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் கொண்டாடுகின்றனர்.

இலங்கையிலும் மக்கள் விட்டுக்கொடுப்புகளுடன் செயற்பட்டு நாட்டை அபிவிருத்தியின் பக்கம் கொண்டுசெல்ல இப்புனித தியாகத் திருநாளில் உறுதிபூனுவோம் எனவும்  இந்தச் சந்தர்ப்பத்தில், குறுகிய அரசியல், கட்சி மற்றும் இயக்க ரீதியான வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக வாழ்வதற்கு முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் வருவோம் என நாபீர் பௌன்டேசனின் தலைவரும் நிர்மாணத்துறை முதுமாணியுமான அல்ஹாஜ் உதுமாங்கண்டு நாபீர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

Advertisements