பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி


– ஜுனைட்.எம்.பஹ்த் –

தியாகத்தையும் பொறுமையையும் பரைசாற்றும் இத்தியாகத் திருநாளில் நமக்காக, நம்சமூகத்திற்காக, நம்நாட்டிற்காக தியாக உணர்வுடன் செயற்பட்டு சமூகத்தின் சுபீட்சத்திற்காகவும் நாட்டின் ஒற்றுமைக்காகவும் ஒன்றுபட்டு உழைப்பதற்கு திடசங்கர்ப்பம் பூண வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இறை தூதரான இப்றாஹிம் நபி (ஸல்) அவர்களின் தியாக உணர்வை நினைவுகூர்ந்து ஹஜ் கடமையை நிறைவேற்றி, உழ்ஹிய்யா கொடுத்து உவகை கொள்ளும் திருநாளாக உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இப்பெருநாள் அமைகின்றது.

ஐம்பெரும் கடமைகளில் இறுதியானதாக காணப்படுகின்ற இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இறைவனை அடிபணிவதன் முழுமைத் தன்மையை நாம் உணர்வதன் மூலம் அதன் பிரதிபலிப்புகள் எம் அன்றாட வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

அத்தோடு சமூக உணர்வு கலந்த சிந்தனையாளர்களாக நாம் மிளிர்வதன் மூலம் இன ஐக்கியத்தின் பிறப்பிடமாக திகழ்ந்து இந்நாட்டின் வளர்ச்சிக்கு எம்மாலான பங்களிப்பினை செய்ய முயல்வோமாக.

இப்புனித தியாகத் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய உள்ளங்களுக்கும் இறைவன் ஈருலகிலும் ஈடேற்றத்தை நல்கி அருள் புரியவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Advertisements