மினா புனிதஸ்தலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 220 பேர் பலி


வருடாந்த ஹஜ் யாத்திரையை ஒட்டி புனித நகரான மக்காவுக்கு அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தபட்சம் 220 பேராவது கொல்லப்பட்டிருப்பதாக சவுதி அரேபிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

மக்காவில் ஏற்பட்ட சனநெரிசலில் 150 பேர் பலி
மினாவில் ஏற்பட்ட சனநெரிசலில் 150 பேர் பலி

புனித  ஹரம்  பள்ளிவாசலில் இருந்து 5 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள மினாவில் நடந்த இந்தச் சம்பவத்தில் மேலும் 450 பேர் காயமடைந்திருப்பதாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

பக்ரித் பண்டிகையின் முதல் நாளில் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஹஜ் யாத்திரையின்போது செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக, எந்தப் பிரச்சனையுமின்றி யாத்திரைகள் நடந்து முடிந்தன.

இதற்கு முன்பாக 2006ஆம் ஆண்டில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்வில் 364 பேர் கொல்லப்பட்டனர்.(BBC)

Advertisements