மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் உயர்ச்சி பெற நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக – இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெருநாள் வாழ்த்துச் செய்தி


– பழுலுல்லாஹ் பர்ஹான் –
மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் உயர்ச்சி பெற நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக என ஐக்கிய மக்கள் சுதந்திர் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும்,மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..
முஸ்லிம் சமூகம் என்றுமில்லாத அளவு பல்வேறுபட்ட துன்பங்களையும்,சோதனைகளையும் இன்று சந்தித்துக் கொண்டு இருக்கின்றது.
குறிப்பாக சர்வதேச ரீதியிலே அரபு நாடுகளில் சிரியா,யெமன்,ஜோர்தான்,ஈரான்,ஈராக்,லிபியா போன்ற பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் பல்வேறுபட்ட துன்பங்களையும்,துயரங்களையும்,சோதனைகளையும் சுமந்து கொண்டு இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் இன்று அகதிகளாக அந்நிய நாடுகளிலே  பல மையில் தூரம் நடந்து குழந்தைகளை இழந்து உறவுகளை இழந்து ,உடல்,சொத்துக்களை இழந்து இன்று அகதிகளாக குடியேறுகின்ற ஒரு மிகப் பயங்கரமான ,பரிதாபகரமான ஒரு சூழ்நிலையிலேதான் நாம் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்.
ஆகவே குறிப்பாக முஸ்லிம்களுக்கு மத்தியிலே ஒற்றுமை ஏற்பட்டு அந்த நாடுகளிலே சமாதானம் ஏற்பட்டு அந்த மக்கள் நிம்மதியோடு வாழ்வதற்காக நாம் எல்லோரும் வல்ல இறைவன் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக.
குறிப்பாக ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் தியாகத்தை நினைவு கூறுக்கின்ற ஒரு நாள் நாம் முஸ்லிம்கள் தியாகத்தோடு வாழ வேண்டும் ,நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் ,ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் நாங்கள் எங்களுடைய இஸ்லாமிய பண்புகளை வெளிப்படுத்த வேண்டும் குறிப்பாக தியாகத்தோடு நாங்கள் தியாகத்தைச் செய்து ஏனையவர்களுக்காக வாழுக்கின்ற ஒரு சூழலை எங்களுக்கு மத்தியிலே ,எங்களுக்குள்ளே உருவாக்கிக் கொள்கின்ற ஒரு தியாக மனப்பாங்கை உருவாக்குகின்றதுதான் இந்த ஹஜ்ஜூப் பெருநாள் ஆகும்.
ஆகவே அவற்றை கருத்திலே கொண்டு எங்களுடைய வாழ்க்கையிலும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோமாக குறிப்பாக அந்த முஸ்லிம்களுக்காக பிராத்திப்போமாக ,இலங்கையிலே இன்று ஏற்பட்டு இருக்கின்ற அமைதி,சமாதானம் தொடர்ந்து இருந்து நாங்கள் நிம்மதியோடு இருப்பதற்காக நாங்கள் எல்லோம் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக என கூறி உங்கள் எல்லோருக்கும் என்னுடைய புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களை எனது குடும்பத்தில் சார்பிலும் எல்லோருக்கும் தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் என ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisements