மட்டக்களப்பு சென் மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் – அஹமட் முஷர்ரப் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட மாவட்டத்தில் 3வது இடம்


– பழுலுல்லாஹ் பர்ஹான் –
 
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நேற்று 07 புதன்கிழமை வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு சென் மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முஹம்மட் ஜவாஹிர் அஹமட் முஷர்ரப் 189 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் காத்தான்குடியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் எம்.ஏ.சீ.எம்ஜவாஹிர் மற்றும் ஆங்கில ஆசிரியை திருமதி சல்மா ஜவாஹிர் ஆகியோரின் புதல்வருமாவார்.