கட்சிகள் பல ஒன்றிணைந்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டி


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் சிலவும் இணைந்து புதிய முன்னணி ஒன்றின் கீழ் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. 

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தரப்பில் அமர்ந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் விமல் வீரவன்ச, டி.யு.குணசேகர, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண மற்றும் உதய கம்பன்பில ஆகியோரின் கட்சிகள் இணைந்து புதிய முன்னணியை உருவாக்கியுள்ளனர்.

Advertisements