கெப்லர் அனுப்பிய புகைப்படத்தில் இருப்பது நட்சத்திரக்கூட்டமா, வேற்றுக்கிரகவாசிகளின் குடியிருப்பா?


அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அதிநவீன சக்திவாய்ந்த கெப்லர் என்ற விண்கலத்தை அனுப்பி, விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் மறைந்து கிடக்கும் கிரகங்களை புகைப்படம் எடுத்து வருகின்றது.

கெப்லர் சமீபத்தில் அனுப்பிய சில புகைப்படங்களில் விநோதமான உருவமைப்பு பதிவாகியுள்ளது.

மிகப் பிரகாசமாகக் காட்சியளிப்பதால் நட்சத்திரக்கூட்டமாக இருக்கலாம் என கருதிய விஞ்ஞானிகள் அதற்கு கே.ஐ.சி. 8462852 என பெயரிட்டுள்ளனர்.

இது குறித்து ‘நாசா’ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவை வேற்றுக்கிரகவாசிகளின் குடியிருப்பாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மிகவும் வெளிச்சமாக இருக்கும் பகுதி வேற்றுக்கிரகவாசிகளின் மின்சார நிலையங்களாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Advertisements