சங்கா மற்றும் மஹேலவின் சாதனை 14 வருடங்களின் பின்னர் முறியடிப்பு


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது விக்கெட்டுக்கான சிறந்த இணைப்பாட்டமான மஹேல ஜயவர்த்தன மற்றும் குமார் சங்கக்கார ஜோடியால் பெறப்பட்ட 162 ஓட்டங்கள் எனும் சாதனை திமுத் கருணரெத்ன மற்றும் சந்திமால் ஜோடியால் முறியடிக்கப்பட்டது.

இவ்வாரம் ஆரம்பமான மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் திமுத் கருணரெத்ன மற்றும் சந்திமால் ஜோடி 238 ஓட்டங்களைப் பெற்றதன் மூலமே இந்த சாதனையானது முறியடிக்கப்பட்டுள்ளது.

சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தனவால் 2001 ஆம் ஆண்டு படைக்கப்பட்ட சாதனையே அன்றைய தினம் தகர்த்தெறியப்பட்டது.

Advertisements