பணப்பரிமாற்றம் இல்லா முதல் நாடாகிறது ஸ்வீடன்


உலகின் அனைத்து நாடுகளிலும் பணம் தான் முக்கிய மாற்றுக் கருவியாக செயற்படுகிறது.

அனைத்து பரிமாற்றங்களுக்கும் மூல ஆதாரமே பணம் தான். ஆனால் முதல் முறையாக இந்த வழக்கத்தைத் தகர்த்துள்ளது ஸ்வீடன்.

ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் பெருமளவில் மொபைல் வழி பணம் செலுத்தும் முறை வழக்கத்திற்கு வந்துவிட்டதால், இனி பணத்துக்கு வேலை இல்லை எனும் நிலை ஸ்வீடனில் வந்துவிட்டது.

ஸ்வீடன் நாட்டின் பணமான ஸ்வீடிஷ் கரோனாவை இப்போது அந்த நாட்டு மக்கள் பெருமளவில் பயன்படுத்துவதில்லை.

பெரும்பாலான செலுத்துகையை அவர்கள் தங்கள் கடன் அட்டை, வங்கி அட்டை அல்லது மொபைல் மூலமே செலுத்துகிறார்களாம்.

இந்த நாட்டில் சின்னச் சின்ன பொருட்களை, சிறு தொகைக்கு வாங்கக் கூட கடன் அல்லது வங்கி அட்டைகளே போதுமானதாக உள்ளன.

ஸ்வீடனின் மொத்த பணத்தில் 40 சதவீதம் மட்டுமே புழக்கத்தில் உள்ளது. மீதி ப்ளாஸ்டிக் அட்டைகள் தான்.

60 சதவீத ரொக்கம் வாங்கிகள் அல்லது வீடுகளில் தூங்கிக் கொண்டுள்ளது.
ஏற்கனவே ஸ்வீடனின் வங்கிகள் பலவும் ரொக்கப் பணத்தை ஏற்பதில்லை என்று அறிவித்துவிட்டன.

இதனால் தன்னிச்சையாக வங்கிப் பரிவர்த்தனை ரொக்கப் பணத்தில் நடைபெறுவதில்லை.