முன்னாள் அமைச்சர் காலஞ்சென்ற கே. வேலாயுதத்தின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன


முன்னாள் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சரான காலஞ்சென்ற கே. வேலாயுதத்தின் இறுதிக்கிரியைகள் பசறையில் நேற்று  பிற்பகல் நடைபெற்றன.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. வேலாயுதம் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை (13) இயற்கை எய்தினார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக ஊவா மாகாண சபை மற்றும் பசறை பிரதேச சபையில் வைக்கப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனையடுத்து பசறை பிரதேச சபை மைதானத்திற்கு தகனக்கிரியைக்காக பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.

பசறை பிரதேச சபை மைதானத்தில் அன்னாரின் பூதவுடல் தீயுடன் சங்கமமாகியது.