இனி ஆண்களும் பாலியல் பலாத்கார வழக்கு தொடுக்கலாம்


உலகம் முழுவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் சீனாவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி ஆண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.
சீன அரசின் அதிகாரப்பூர்வ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின்படி, தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் ஆண் அல்லது பெண் இருவரில் யார் பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்டாலும் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்கிறது.

இதுவரை சீனாவில் பின்பற்றப்பட்டு வந்த சட்டத்தின்படி ஆண்கள் பாலியல் பலாத்கார வழக்கு தொடர முடியாத சூழ்நிலை இருந்தது. அப்படி வழக்கு தொடர விரும்பினாலும் வேறு பிரிவுகளின் கீழ்தான் வழக்கு பதிவு செய்ய முடியும். இதானல் ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு மிகக்குறைந்த அளவிளான தண்டனையே கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.