ஜனநாயக நாட்டில் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கும் உரிமை உள்ளது


ஜனநாயக நாடொன்றில் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான உரிமை இருப்பதாக சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சட்டம் மற்றும் அமைதியை மீறும் சந்தர்ப்பங்களில் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் விஷேட உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் வரையறையை மீறியுள்ளார்களா என்பது தொடர்பான பொலிஸ் ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விசாரணைகளை மேற்கொள்ளும் குழுவில் சிரேஷ்ட பொலிஸ் அதிகரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமரின் ஆலோசனைக்கமைய, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பட்டகொடவின் தலைமையில் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.