தேவையற்ற புகைப்படங்களை நினைவில் இருந்து அகற்றும் கூகுள்


அனைவரது கையிலும் எளிமையாக கிடைத்துள்ள ஸ்மார்ட்போன்கள், எஸ்.எம்.எஸ்களைப் பரிமாறிக்கொள்வது முதல், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது என அனைத்து விதத்திலும், நமது நண்பர்களை நமக்கு நெருக்கமாக்குகின்றது.

அவ்வாறு தான காதலிக்கும் போதும் எங்கெல்லாம் காதலரை சந்திக்க நேர்கிறதோ அங்கெல்லாம் ஒரு புகைப்படமாவது எடுத்து, இணையம் முழுவதும் காதல் வளர்ப்போம்.

காதலரை பிரிந்த பின்னரும் அந்த நினைவுச் சின்னங்களை அழிக்க மனமில்லாமல், அவர்களை மறக்கமுடியாமல் தவிக்கும் நமக்கு கூகுளின் போட்டோ செயலி உதவ முன்வந்துள்ளது.

உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள கூகுளின் போட்டோ செயலியைத் தட்டி அதிலுள்ள ‘பீப்பல்’(people) என்கிற பொத்தானை அழுத்தி, உங்களது முன்னாள் காதலி/காதலனின் புகைப்படத்தை தேர்வு செய்வது போதுமானது. இதன்பிறகு பிரிந்துபோன காதலரை கூகுள் ஒருபோதும் உங்களுக்கு நினைவுபடுத்த எண்ணாது.

தற்போது அன்ட்ரோய்ட் போன்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ள இந்த வசதி, விரைவில் ஐபோனுக்கும், கணினி பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.