எவரும் அன்று வாய் திறக்கவில்லை: HNDA மாணவர் பிரச்சினை தொடர்பில் எஸ்.பீ. திஸாநாயக்க


HNDA மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடந்த அரசாங்கத்தில் சிலர் இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்கவிடம் நேற்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

குறித்த காலத்தில் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க உயர் கல்வி அமைச்சராக பதவி வகித்தார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்;

உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் டிப்ளொமா மாணவர்களின் பாடநெறியை பட்டப்படிப்பாக மாற்றுவதற்கான, குறிப்பாக ஒரு வருட டிப்ளொமா பாடநெறியின் பின்னர் பட்டப்படிப்பாக மாற்றுவதற்கான சுற்றுநிருபத்துடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை…. அது தொடர்பில் பல்வேறு நிலைப்பாடுகள் இருந்தன. அத்துடன், அமைச்சரவையிலும் அது குறித்து அதிக விவாதம் இடம்பெற்றது. எனினும், அது அங்கீகரிக்கப்பட்டது. நான் ஒன்றைக் கூற வேண்டும், நேற்று சுலோகங்களை ஏந்தியிருந்த எவரும் அன்று வாய் திறக்கவில்லை.