கொழும்பு கொம்பனித் தெருவில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு


கொழும்பு கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு நேற்று காலை குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலவாக்கலையை சேர்ந்த 35 வயதுடைய நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மேலும் இருவருடன் குறுக்கு வீதியூடாக ரயில் நிலையத்திற்கு வரும் வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisements