சிங்கப்பூரில் மாதுலுவாவே சோபித்த தேரருக்கு சிகிச்சை: செலவீனங்களைப் பொறுப்பேற்றது அரசாங்கம்


நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அண்மையில் அவருக்கு இருதய சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய மாதுலுவாவே சோபித்த தேரர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த சந்தர்ப்பத்திலேயே அவர் சிங்கப்பூரிலுள்ள வைத்தியசாலையொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் சிகிச்சைகளுக்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விசேட வைத்தியர் ஒருவருடன், மாதுலுவாவே சோபித்த தேரர் விசேட விமானமொன்றின் ஊடாக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.