சிரியாவில் வான்வழித் தாக்குதல்: இங்கிலாந்து பிரதமர் கமரூனுக்கு கடும் எதிர்ப்பு


ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க, சர்வதேச அளவில் தெளிவான திட்டம் இல்லாதவரை, வான் வழி தாக்குதல்களை பிரிட்டன் நீடிக்கக் கூடாது என்று அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனை எச்சரித்துள்ளனர்.

ஈராக்கில் இயங்கிவரும் ஐ.எஸ் படைகள் மீது பிரிட்டன் ஏற்கனவே தாக்குதல்கள் நடத்திவருகிறது. மேலும் அது சிரியாவில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட, கூட்டணிப் படைகளுக்கு உதவி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சிரியாவில் இயங்கிவரும் ஐ. எஸ் தீவிரவாதிகளை ஒடுக்கவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் (David Cameron), பாராளுமன்ற ஒப்புதலைக் கோரி வருகிறார்.

இந்நிலையில், சிரியாவில் வான் தாக்குதலை நடத்த பாராளுமன்ற அனுமதி கோரும் திட்டத்தை கைவிடுமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அழுத்தம் அதிகரிக்கின்றது.

Advertisements