துருக்கி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அர்தூகான் அரசு சர்வேதச முஸ்லிம்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் – இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்


– பழுலுல்லாஹ் பர்ஹான் –
 
துருக்கி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அர்தூகான் தலைமையிலான அரசு சர்வேதச முஸ்லிம்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
 
துருக்கி தேர்தலில் அர்தூகானின் கட்சி வெற்றி பெற்றிருப்பதை நான் வரவேற்கிறேன் எனவும் குறிப்பாக இன்று அரபு நாடுகளிலே ஏற்பட்டு இருக்கின்ற மிக மோசமான சூழ்நிலைக்கு மத்தியில் துருக்கியினுடைய புதிய பிரதமராக அஹமத் தாவூத் தெரிவு செய்யப்பட்டிருப்பது ஒரு வரலாற்று மைல்கல்லாக நாம் பார்க்கின்றோம்.
 
பொருளாதாரத்திலும், இராணுவரீதியிலும் மிக பலம்வாய்ந்த நாடான துருக்கி கடந்த காலத்தில் சர்வேதேச ரீதியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலைமைகளின் போது இந்த நாடு அக்கறை இல்லாமல், கரிசனை அற்று இருந்தது மிக மன வேதனை அளித்தது அந்த அடிப்படையில் புதிய துருக்கிய பிரதமர் சர்வேதேச முஸ்லிம்கள் தொடர்பில் அக்கறையோடு இருப்பது அவருடைய பேச்சுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதானது முஸ்லிம்களுக்கு மிக சந்தோசத்தை அளிக்கின்றது.
 
அந்த வகையில் சவூதி அராபிய உட்பட அரபு நாடுகளோடு இணைந்து ஒரு பலம் வாய்ந்த சக்தியாக முஸ்லிம் சமூகத்தையும் அதன் பலத்தையும் கட்டியொழுப்பி , முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் எதிராக செயற்படுகின்ற சர்வேதேச சக்திகளுக்கு எதிராக செயற்படும் மிகப்பெரும் சக்தியாக அல்லாஹ்வின் உதவியோடு ஒரு பங்காளியாக துருக்கி மாறும் என எதிர்பார்கின்றோம்.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் துருக்கி பிரதமருக்கு நீண்ட ஆயுளையும் சரீர சுகத்தையும் நல்ல அறிவையும் நேரான பாதையையையும் காட்டுவதோடு அவரும் அவரது அரசாங்கமும் உலக முஸ்லிம்களுக்காக பாடுபடும் சக்தியாக மீண்டும் பலம் வாய்ந்த துருக்கியாக கட்டியெழுப்ப உதவிசெய்ய வேண்டும் என்பதோடு , துருக்கி முழுமையான இஸ்லாமிய நாடாகவும் ,அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் , இஸ்லாமிய கொள்கைகள் கோட்பாடுகளை பின்பற்றுகின்ற ஒரு நாடாகவும் மாறுவதற்க்கு இறைவன் வழிவகுக்க வேண்டும் என இந்த சந்தர்பத்தில் பிராத்திக்கின்றேன் என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisements